பக்கம்:விசிறி வாழை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 விசிறி வாழை

ஆனல் சேதுபதியோ அப்படிக் கூருமல், வரச் சொல் லேன்’ என்றார்.

ஏதேனும் ஒரு காரணத்தை வைத்துக் கொண்டு சேதுபதியைச் சந்திக்க விரும்பினுள் பார்வதி.

நேற்று பாரதி ஜாக்ரபி வகுப்புக்கு மட்டம் போட்டு விட்டுப் போனதில் பிரின்ஸிபாலுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி! அதையே காரணமாக வைத்துக் கொண்டு அவரைச் சந்தித்து விடலாமல்லவா!

திருவாளர் சேதுபதியின் உள்ளத்திலும் பார்வதியைக் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளுறக் கனிந்து கொண் டிருந்தது. பாரதிக்கு டியூஷன் ஏற்பாடு செய்யச் சொல்லும் சாக்கில் பார்வதியை வீட்டுக்கு அழைக்கலாமா என்றுகூட அவர் எண்ணியதுண்டு. ஆனல் எந்த ஒரு எண்ணத்தையும் செயலுக்குக் கொண்டுவருமுன் அதைப்பற்றி ஆயிரம் முறை சிந்திப்பது அவருடைய வழக்கமாயிற்றே! அப்போது பார்வதியே போன் செய்து வரட்டுமா என்று கேட்கவே அவர் மிக்க மகிழ்ச்சியுடன் வரச் சொல்லேன்’ என்று கூறிவிட்டார்.

யாருடைய வரவையும் அவ்வளவு ஆவலுடன் எதிர் பார்க்காத அவருக்கு, பார்வதி வரப் போகிருள் என்னும் செய்தி மட்டும் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அது சேது பதிக்கே வியப்பாக இருந்தது.

பார்வதி அறைக்குள் நுழையும்போதே ‘ஓ! வாருங் கள்’ என்று வரவேற்று, எதிரிலுள்ள நாற்காலியில் அமரச் சொன்னர். முகத்தில் புன்சிரிப்புத் தவழ, பார்வதி அடக்க மாக அவர் எதிரில் உட்கார்ந்து கொண்டான். சில விநாடி கள் அந்த அறைக்குள் ஓர் அசாதாரணமான அமைதி நிலவி யது. எப்படிப் பேச்சைத் தொடங்குவது என்று பார்வதி யோசித்தாள். எடுத்த உடனேயே பாரதியைப் பற்றி அவரிடம் புகார் கூறுவது அவளுக்கே பிடிக்கவில்லை. எனவே, அவரே முதலில் பேசட்டும் என்று காத்திருந்தாள். எவ்வளவு நேரம்தான் சும்மா உட்கார்ந்திருக்க முடியும்? அந்த அறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/50&oldid=689549" இலிருந்து மீள்விக்கப்பட்டது