பக்கம்:விசிறி வாழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து நான்கு 47

யில் மாட்டப்பட்டிருந்த அவருடைய மனைவியின் படத் தையே சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். பாரதி யின் ஜாடையாகவே காணப்பட்ட அந்த உருவத்தைக் கண்ட போது, பார்வதியின் கண்கள் கூசின.

சேதுபதி இலேசாகக் கனத்துக் கொண்டு, ஏதாவது விசேஷம் உண்டா?’ என்று கேட்டார்.

“ஆமாம்” என்று பதிலளித்த பார்வதி, தான் கூறவந்த விஷயத்தைச் சொல்லலாமா வேண்டாமா, என்று சற்றுத் தயங்கி விட்டு, ‘ஒன்று மில்லை; பாரதியைப் பற்றிச் சொல்லி விட்டுப் போகத்தான் வந்தேன். அவள் நேற்று மூன்று மணிக்கு யாருடைய அனுமதியுமின்றி காலேஜிலிருந்து வெளியே போயிருக்கிருள்...?? என்றாள்.

  • அப்படியா!’ வியப்புடன் ஒலித்தது சேதுபதியின் குரல்.
    • ஆமாம்; அனுமதியின்றி அவள் வகுப்பை விட்டுப் போவது இதுதான் முதல் தடவை. ஆகவே, இதை ஒரு பெரிய புகாராகத் தங்களிடம் சொல்ல வேண்டாமென்று தான் முதலில் நினைத்தேன். மாணவிகளின் ஒழுக்கம் மிகவும் முக்கியமானது. ஆகவே இம்மாதிரி தவறுகளை வளர விடா மல் முளையிலேயே கிள்ளி விடுவது நம்முடைய கடமை யல்லவா? தங்களுக்கும் தெரிந்திருக்க வேண்டுமென்பதற் காகவே இதைச் சொன்னேன். அவள் நல்ல பெண்தான். யாராவது சிநேகிதிகளுடன் சேர்ந்து கொண்டு சினிமாவுக் குப் போயிருப்பாளோ என்பது என் சந்தேகம்.. ‘ என்றாள் பார்வதி. - -

“ஆமாம், அப்படித்தான் இருக்கும். அவள் நேற்று நேரம் கழித்து வந்த விஷயம் எனக்கும் தெரியும். உடனே கூப்பிட்டு விசாரித்தபோது தான் கணக்கில் வீக் என்றும் யாரோ ஒரு ஹாஸ்டல் பெண்ணிடம் கணக்குக் கற்றுக் கொண்டிருந்ததாகவும் என்னிடம் துணிந்து ஒரு பொய்யைச் சொன்னுள்...’ என்றார் சேதுபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/51&oldid=689550" இலிருந்து மீள்விக்கப்பட்டது