பக்கம்:விசிறி வாழை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 விசிறி வாழை

‘நான்கூட அதைத்தான் சொன்னேன். இப்போது என்னடா அவசரம் வந்து விட்டது? வயசு ஐம்பதுதானே ஆகிறது! இன்னும் பத்து வருஷம் போகட்டுமே” என்றேன்’’ என்று ராஜா சிரித்துக் கொண்டே கூறினன்.

ரோஜா! சின்னேயனுக்கு அப்படி என்ன வயசாகிவிட் டது? மிஞ்சில்ை ஐம்பது இருக்கும். அது ஒரு வயசா? சாப் பிட்டு முடிந்ததும் செக்குப் புத்தகத்தைக் கொண்டு வா, கையெழுத்துப் போட்டுத் தருகிறேன். உடனே அவனுக்குப் பணத்தைக் கொடுத்தனுப்பு’’ என்றாள் பார்வதி.

வேயதாகிவிட்ட பிறகும் கலியாணம் செய்து கொள் ளும் வழக்கம் மேல் நாடுகளில்தான் உண்டு என்று கேள்விப் பட்டிருக்கிறேன். வர வர நம் நாட்டிலும் இது சகஜமாகி விட்டது...’ என்று முணுமுணுத்தான் ராஜா.

உனக்கு இதில் என்ன ஆட்சேபனை...?’ பார்வதி கேட்டாள்.

எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. தங்க ளுடைய வயதுக்கேற்ப இன்னொரு வயதான மங்கையாகப் பார்த்து ஜோடி சேர்த்துக் கொள்ளாமல், இளம் பெண் களின் வாழ்வைப் பாழாக்கி விடுகிறார்களே என்பதை எண் னும் போதுதான்...’

அவரவர்கள் வயதுக்கேற்ற முறையில் ஜோடி சேர்த் துக் கொள்ள வேண்டும்...அவ்வளவுதானே? ராஜாவின் பதில் பார்வதிக்குத் திருப்தியை அளித்தது. சேதுபதியின் வயதோடு தன் வயதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டாள். சரியான பொருத்தம்தான். அவருடைய ஆழ்ந்த அறிவு, கண்ணியமான தோற்றம், அடக்கமான குணம், வார்த்தை களே நிறுத்துப் போட்டுப் பேசும் தன்மை, குற்றமற்ற குழந் தைச் சிரிப்பு-எல்லாமே தனக்குப் பொருத்தமாக அமைந் திருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.

“கல்லூரிக்கு நேரமாகி விட்டது; நான் புறப்படு கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே வாசலுக்குச் சென்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/56&oldid=689555" இலிருந்து மீள்விக்கப்பட்டது