பக்கம்:விசிறி வாழை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 விசிறி வாழை

விட்டுத் தன் மகள் பார்வதியையும், மகன் சிவராமனையும் பால்ய வயதிலேயே அநாதைகளாக்கிச் சென்றுவிட்டார்.

பலராம வாத்தியாரின் நண்பர் சாம்பசிவம் பார்வதி யையும், அவள் அண்ணனையும் தன் வீட்டோடு அழைத்து வந்து ஆதரவு காட்டி வளர்க்கலானர். .

உரிய காலத்தில் சிவராமனுக்குத் திருமணம் நடந்தது. மறு வருடமே அவன் மனைவி ஒர் ஆண் குழந்தையைப் பெற் றெடுத்துத் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அத்தத் துயரம் தாங்காமல் சிவராமன் பார்வதிக்குக் கடிதம் எழுதி வைத்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் கொள்ளா மல் வடநாட்டுக்கு யாத்திரை கிளம்பிப் போய்விட்டான். போனவன் போனவன்தான்; அப்புறம் திரும்பவேயில்லே

அன்றே அண்ணனுக்குப் பிறந்த ஆண் மகவைக் காப் பாற்றும் பொறுப்பு பார்வதியின் தலையில் விழுந்தது. கன்னிப் பருவத்தைக் கட்டிக் காக்க வேண்டிய கடமை, வறுமையின் கொடுமை, இவற்றுக்கிடையே குழந்தையை வளர்க்க வேண்டிய கடமையும் சேர்ந்து நிலை தடுமாறி நின்ற பார்வதிக்கு ஆதரவாக இருந்து பரிவு காட்டியவர் சாம்ப சிவம்தான். அவருக்குக் காது சற்று மந்தம். செவிச் செல்வத் தைத் தவிர மற்ற செல்வங்களை யெல்லாம் பெற்று வாழ்க் கையின் இன்பங்களே யெல்லாம் ஆண்டு அனுபவித்து ஏகாங்கியாக வாழ்பவர் அவர். உற்றார் உறவினர்களிடம் ஒட்டுதல் இன்றி, பற்றற்ற ஞானிபோல் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்த அந்த வயோதிகருக்கு ஆண்டவன் இப்படி ஒரு பொறுப்பை அளித்திருந்தான். ஆலுைம் பார்வதி அவருக்கு ஒரு பாரமாக இருக்க விரும்பவில்லை. காலையிலும் மாலேயிலும் தன் கல்லூரித் தோழிகள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாள். விசித்திர மான தன் வாழ்க்கையை எண்ணிப் பார்த்தபோது பார் வதிக்கே வேடிக்கையாக இருந்தது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/68&oldid=689568" இலிருந்து மீள்விக்கப்பட்டது