பக்கம்:விசிறி வாழை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஏழு 75

ரும் கம்பலேயுமாகச் சேதுபதியின் வீட்டோடு வந்து சேர்ந் தாள். ஆதரவற்றுக் கிடந்த சேதுபதியின் குடும்பப் பொறுப்பை அவளே ஏற்க வேண்டியதாயிற்று. சமயம் நேரும்போதெல்லாம் அவ்வப்போது சேதுபதியை மறுமணம் செய்து கொள்ளும்படி அவள் தூண்டிக் கொண்டிருந்தாள். சேதுபதி அதற்கு இணங்கவில்லை.

‘குழந்தை பாரதியிடம் அன்பும் ஆதரவும் காட்டி வளர்க்க நீ இருக்கும்போது நான் எதற்கு மறுமணம் செய்து கொள்ள வேண்டும்?’ என்று கூறிவிட்டார்.

அந்தப் பிடிவாதம், தீவிர விரதம், திடசித்தம், உறுதி மொழி எல்லாம் இப்போது பார்வதியின் முன்ல்ை ஆட்டம் கண்டுவிட்டன. -

நினைவுச் சுழலிலிருந்து தன்ன விடுவித்துக் கொண்டு நாற்காலியை விட்டு எழுந்து நின்றார் சேதுபதி. பார்வதி வரும் நேரமாகிறது. இந்த நேரத்தில் நான் இங்கே இருப் பதைக் கண்டால் என்&னப்பற்றி என்ன நினைத்துக் கொள் வாள்? தணக்காகக் காத்துக்கொண்டிருப்பதாக, தன் வரவை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதாக அல்லவா எண்ணுவாள்? அம்மாதிரி அவள் தன்னைப்பற்றி எண்ணுவதற்கு இடம் தரக்கூடாது. அவள் வருவதற்குள் நான் வெளியே போய் விட வேண்டும். அப்போது என்னைப்பற்றி பாரதியிடம் விசாரிப்பாள். மாலேயில் டியூஷனுக்கு வரும்போது காலேயில் சந்திக்க முடியவில்லேயே’ என்று என்னிடம் கூறுவாள். தன் மீது அவள் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் அப்போது அவள் முகத்தில் வெளிப்படும்.’

கல்கத்தாவிற்குப் போட்டிருந்த டிரங்க் காலே ரத்து செய்துவிட்டு, பாரதி’ என்று அழைத்தார்.

“என்ன அப்பா?’ என்று கேட்டுக்கொண்டே வந்தாள் பாரதி.

“எனக்கு அவசரமாக வேலே இருக்கிறது. நான் வெளியே போய்விட்டுப் பன்னிரண்டு மணிக்கு வருகிறேன்...”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/79&oldid=689580" இலிருந்து மீள்விக்கப்பட்டது