பக்கம்:விசிறி வாழை.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குருத்து ஒன்பது 91

தத்துவங்களும் தலைவர்களும் உள்ளவரை சண்டையும் சச்சரவும் இருந்து கொண்டுதான் இருக்கும். பகுத்தறியும் சக்தியோ, தலைமையோ தத்துவங்களோ இல்லாத எறும்பு களையும் பட்சி ஜாலங்களையும் பாருங்கள். எவ்வளவு ஒற்று. மையாகச் சண்டை சச்சரவின்றி வாழ்கின்றன...”

சேதுபதியின் பதில் பார்வதியை வியப்பில் ஆழ்த்தி விட்டது.

‘அடாடா! எவ்வளவு பெரிய விஷயத்தை எவ்வளவு தெளிவாக விளக்கி விட்டார்1-அவளுடைய வியப்புத் தீரு முன்னரே, சேதுபதி இன்னொரு முறையில் அவள் கேள் விக்குப் பதில் அளித்தார்.

“ மனிதன் உள்ளத்தில் ஓர் ஆசை உண்டாகிறது. அதைத் தீர்த்துக் கொண்டால் பிறகு சுகமாக இருக்கலாம் என்று எண்ணுகிருன். அதற்காகப் படாத பாடெல்லாம் படுகிருன். ஆனல் ஆசையின் படிகளுக்கோ ஒரு முடிவே இல்லே...??

எல்லாமே விளங்கிவிட்டது போல் தன்னுடைய சந்தேகங்கள் அனைத்துக்குமே விடை கிடைத்துவிட்டது போல் நிறைவு ஏற்பட்டது அவளுக்கு.

எப்படியும் தன் எண்ணத்தை-நீண்ட நாளைய விருப் பத்தை வெளியிட்டுவிட வேண்டும் என்ற முடிவுடன் வந் திருந்த பார்வதி,அவருடைய பேச்சில் மயங்கி தன்னை மறந்த வளாய் அவருடன் பேசிக் கொண்டிருப்பதிலேயே பெரு மகிழ்ச்சியும் நிம்மதியும் பெற்றவளாய் உட்கார்ந்திருந்தாள். டெலிபோன் மணி ஒலித்தது. சேதுபதி ரிளிவரை எடுத்துப் பேசினர். அந்தக் குழலில் வந்த செய்தியைக் கேட்டதும் அவர் முகம் மாற்றமடைந்ததைப் பார்வதி கவனிக்தாள். -

  • என்ன, பஞ்சுத் தொழிற்சாலேயில் தீயா? இரண்டு லட்சமா? உயிர்ச்சேதம் ஒன்றுமில்லையே?’ என்று கேட்ட சேதுபதி ரிஸிவரைக் கீழே வைத்துவிட்டு, நல்ல வேளை! உயிர்ச்சேதம் ஒன்றும் இல்லையாம்! இரண்டு லட்சம் ரூபாய்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/95&oldid=689598" இலிருந்து மீள்விக்கப்பட்டது