பக்கம்:விசிறி வாழை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 விசிறி வாழை

சேதமாம் பரவாயில்லை; இன்ஷ9ர் செய்யப்பட்டிருக் கிறது...” என்று சர்வ சாதாரணமாகக் கூறினர்.

தீ என்ற சொல் கேட்டுத் துணுக்குற்ற பார்வதி, தீயா? யாருடைய பஞ்சாலையில்?’ என்று விசாரித்தாள்.

  • என்னுடைய பஞ்சாலையில்தான்’ என்றார் சேதுபதி மிக அமைதியாக, -

இரண்டு லட்சம் என்ற வார்த்தை அவரை அசைக்க வில்லே. உயிர்ச் சேதம் உண்டா? என்றுதான் விசாரித் தார்.

உயிரின் மதிப்புக்கும் பொருளின் மதிப்புக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குப் புரிந்திருந்தது. அதனுல்தான் பொருள் நஷ்டத்தை அவர் பெரிதாக மதிக்கவில்லே.

பார்வதி சிரித்தாள். அதைக் கண்ட சேதுபதி அவள் சிரிப்பதன் காரணத் தைப் புரிந்துகொண்டு புரியாதவர் போல், ஏன் சிரிக்கிறீர் கள்?’ என்று கேட்டார்.

“எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. ஒரு பஞ்சாலேயே தீப்பற்றி எரிந்து போய்விட்டது என்று அறிந்தும் தாங்கள் கொஞ்சம்கூடப் பரபரப்படையவில்லே. இரண்டு லட்சம் நஷ்டம் என்று தெரிந்தும் சர்வ அலட்சியமாக இன்ஷஇர் செய்யப்பட்டிருக்கிறது...” என்று கூறிப் பேசாமலிருந்து விட்டீர்களே! அந்த நஷ்டம் இன்ஷஅரன்ஸ் கம்பெனியைச் சேர்ந்தது என்பதால்தானே, இல்லையா? என்று கேட்டாள். ‘இல்லை; நஷ்டஈடு கொடுக்க வேண்டிய அந்த இன்ஷ9 ரன்ஸ் கம்பெனியும் என்னுடையதுதான் ’’ என்றார் சேதுபதி.

பார்வதி திகைத்தாள், -

ஒரு பஞ்சாலே தீப்பிடித்து எரிந்து போய்விட்டதென் ருல், அந்த நஷ்டத்தைத் தேசிய நஷ்டம் என்றுதான் கூற வேண்டும். இந்தத் தேசத்தின் உற்பத்தியில் ஒரு சிறிதளவு நஷ்டமாகிவிட்டது என்பதுதான் அதன் பொருள். பஞ் சாலேக்கோ இன்ஷஒரன்ஸ் கம்பனிக்கோ நஷ்டமாகாது’’ என்றார் சேதுபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/96&oldid=689599" இலிருந்து மீள்விக்கப்பட்டது