பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿霆 விஞ்ஞானச் சிக்கல்கள் இப்பட்ை ஆதாரத் தத்துவமாகவே இன்றும் அமைந்து விட்டது எனலாம்.

சிந்தனைச் சிக்கல்களிலே இவ்வாறு ஏற்பட்ட எதிர்ப்புகள் எல்லாவற்றையும் வழக்கு மன்றங் களிலேயும் - வாத அரங்குகளிலேயும் - அறி ஞருரைகளிலேயும் சந்திக்க வேண்டிய தீராதப் பகைப் பிரச்சினைகளிலேயே நியூட்டன் சிக்கிக் கொண்டு பெரிதும் அவதிப்பட்டார்.

உலகப் பகழ் பெற்ற மாபெரும் விஞ்ஞானியான நியூட்டனுக்கு, தனது வாணாளெல்லாம் இவ்வாறே போராடும் நிலை ஏற்பட்டது. ஏன்?

உலக நாடுகளில் ஆங்காங்கே தோன்றிய ஒவ்வொரு விஞ்ஞான மேதையும், அவரவர் ஆராய்ச்சித் துறைக்கேற்ப விஞ்ஞானச் சிக்கல் களைச் சந்தித்தே வந்தனர்.

அந்தந்த விஞ்ஞானச் சிக்கல்களை அடிப் படையாக வைத்து அற்புதத் தத்துவங்களை உரு வாக்கி, விஞ்ஞானப் படைப்புகளை விளைவித் துள்ளனர்.

அந்த சிக்கல்களை அவிழ்க்கின்றபோது, ஒவ் வொருவருடைய சிந்தனையின் விளைவுகளைப் பின்னணியாகக் கொண்டே பெரிதும் போராடி உழைத்திருக்கின்றனர்.

அதனாலே, ஒவ்வொருவர் படைப்புகளும் மற்றொருவருடைய ஆராய்ச்சிக் கோட்டையின் அடுக்குச் சுவர்களாக அமைந்துள்ளன.

அந்த சுவர்களை எழுப்பியவன், 'நான், நீ" என்று போட்டி போட்டுக் கொண்டு,