பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 酵变9 வந்ததால் உயிருக்கு உயிரான நண்பர்களின் எதிர்ப்பை எல்லாம் ஏற்க வேண்டியவனாகி விட்டேன்”

'நான் கண்டுபிடித்த விஞ்ஞானப் புதுமைகள் எல்லாம், யாருடைய சிந்தனையிலோ தோன்றி யவை அல்ல”

‘என்னுடைய சிந்தனைச் சிக்கல்களையே நான் முயன்று ஆராய்ந்து முடிவுகளையும் கூறியிருக்கி றேன். என்றெல்லாம் நியூட்டன் எதிர்வாதம் செய்தார் - ஐகென்சிடம்.

அறிவு மணக்கும் இடங்களிலே எல்லாம் இதைப் பற்றிய விவாதங்கள் நடந்து கொண்டே இருந்தன.

"விஞ்ஞான ஆராய்ச்சிகளை நடத்தி வருவதற்கு மிகச் சிறந்ததும், தவறுகள் நிகழாமல் எச்சரிக்கை உடையதுமான வழி எது என்றால், முதன் முதலாக பொருள்களின் தன்மைகளையும் - பண்புகளையும் தளராத ஊக்கத்தோடும், சோர்விலா முயற்சியோடும் ஊன்றி அறிய முயல வேண்டும்'.

"அப்படி அறிந்தவற்றை அதன் பின்னர், பரிசோதனைகளின் மூலமாக உறுதிப் படுத்த வேண்டும். அதற்குப் பிறகே, அவற்றை விளக்கக் கூடிய கொள்கைகளை, மெல்ல மெல்ல அமைக்கத் தொடங்க வேண்டும், என்ற அற்புதமான, அறிவியலுக்கு அடிப்படையான, ஒரு புதிய தத்துவத்தை அவரது எதிர்ப்பு வாதங்களின் போது நியூட்டன் வெளியிட்டார்.

இந்த தத்துவம், விஞ்ஞான உலகுக்கு ஒர்