பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானச் சிக்கல்கள் வந்த விளைவே, இந்த விஞ்ஞான உலகின் எதிர்ப்பு என்று கூறி நியூட்டன் மிக மிக வருந்தினார்.

சனி கோளைப் பற்றிக் கலிலியோ கண்டறிந்த 'ஒளிவட்டம்' என்ற சிந்தனைச் சிக்கவை, அறிவுலகம் ஏற்கும், நிரூபணங்களோடு நிருபித்துக் காட்டியவர் க்றிஸ்டியன் ஹைகென்ஸ் என்ற மேதை.

'ஒளி வட்டம் என்பது மோதிரம் போன்றது, பெரிதான்து, தட்டையாக இருப்பது என்று ஹைகென்ஸ் கண்டுபிடித்துக் கூறினார்.

க்ரிஸ்டியன் ஹைகென்ஸ், நியூட்டனுக்கு நெருங் கிய நண்பர். அவருடைய அரிய விஞ்ஞான கண்டு பிடிப்புகளைக் கண்டு ஐசக் வியந்தார்.

அத்தகைய ஹைகென்ஸுக்கும் - நியூட்டனுக் கும் ஒளி - இயல் ஆராய்ச்சிப் பற்றிப் பெருத்த வாக்கு வாதம் ஏற்பட்டது.

ஒளி-இயல், என்ற, ஒளியினும் ஒளிமிக்க நூலை எழுதி ஐகென்ஸ் வெளியிட்டார்.அதனை "ட்ரீட்டிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவர்.

அந்த ஒளி - இயல் என்ற ஒளியினும் ஒளிமிக்க நூலை எடுத்து மேசையின் மீது வீசி, நியூட்டன் எழுதிய ஒளி - இயல் கருத்துக்களைக் கொண்ட கட்டுரைகளையும் எடுத்து எறிந்து, இரண்டையும் ஒப்பு நோக்கு என்று முகத்திலறைந்தாற் போல நியூட்டனைக் கேட்டார் கிறிஸ்டியன் ஐகென்ஸ். ‘என்னுடைய ஒளி - இயல் கொள்கைகள் எப்போதோ என் ஆராய்ச்சியில் சிக்கியவை. காலம் தாழ்த்தி எனது நூல்களும், கட்டுரைகளும் வெளி