பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 詹97 வந்தால்கூட, நியூட்டன் வேறு பக்கமாகத் திரும்பிப் போய் விடுவார். அவரவருக்கு ஏற்பட்ட சிந்தனைச் சிக்கலால் தலை சிறந்த இந்த விஞ்ஞானப் பேரறிஞர்களிடையே மனக்கசப்பும் மனமாச்சர்யங்களும், ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போடும் கூச்சல்களும் ஏற்பட்டன.

இவர்களது சிந்தனைச் சிக்கலால் விளைந்த விளைவுகளைக் கண்டு மனம் வருந்திய கிறிஸ்டர்பெர்ரன் என்ற ஆக்ஸ் ஃபோர்டு பல்கலைக் கழக வானியல் பேராசிரியர், இருவரையும் சமாதான்ப்படுத்திட எவ்வளவோ முயன்றார். அவர் முயற்சிகள் எல்லாம் வீணாகி விட்டன.

நியூட்டனுக்கும் - ஹாக்குக்கும் இடையே சமா தான்த்தை உருவாக்க நினைத்து, அவர் தனது ஆராய்ச்சிக் கருவையும் - உருவையும் விளக்கினார்.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற வான நூல் அறிஞர் எட்மட் ஹால், என்னிடம் கோள்களின் இயக்கங் களைப் பற்றிக் கெப்லர் கூறியிருந்த கோட்பாடு களைக் குறித்து விவாதிக்க வந்தார். அப்போதே நான் அவரிடம் 'புவி ஈர்ப்புச் சக்திக் கண்டுபிடிப்பைப் பற்றிய விவரங்களை எல்லாம் கூறியிருக்கிறேன். என்று, நியூட்டன் - கிறிஸ்ட்டர் பெர்ரனிடம் கூறினார்.

'நான் கூறுவதன் எல்லா விவரங்களையும் எட்மட் ஹால் என்பவரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

'என்னுடைய கண்டுபிடிப்புகளை நான் உடனுக்குடன் வெளியிடாமல் தேக்கி வைத்ததால்