பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

斃體 விஞ்ஞானச் சிக்கல்கள் uSueeTTS eO BkBB BBB சிதறி எறியப்படும்’ என்று இராபர்ட் ஹாக் கண்டுபிடித்துக் கூறினார்.

இலண்டனிலே உள்ள அரசர் பிரான் சங்கத்தில் ஹாக் ஒர் அறிவியல் பேருரை நிகழ்த்தியபோது, 'புவி ஈர்ப்புச் சக்தி'யைப் பற்றி யெல்லாம் குறிப்பிட் டிருந்தாராம். அவர் இந்த பேருரையை ஆற்றிய போதுகட நியூட்டன் எழுதிய பிரின்சிப்பியா என்ற நூல் வெளியிடப்படவில்லை.

அதற்குப் பிறகு, அந்த புத்தகம் வெளிவந்ததும், ஹாக் அதைப் படித்துப் பார்த்தார்.

தாம் கண்டு பிடித்த புவி ஈர்ப்பு சக்தி ஆராய்ச்சியை நியூட்டன் பயன்படுத்திக் கொண்டது தவறு என்று பகிரங்கமாகக் கண்டித்தார்.

நியூட்டன் தமது ஆராய்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டதுமல்லாமல், அதை ஒப்புக் கொள்ளாமலும் இருந்ததைக் கண்டு ஹாக் மனம் கொதித்தார்.

இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் நேரிடையாகச் சந்தித்துக் கொண்ட போது, பலமான வாக்கு வாதங்கள் ஏற்பட்டன.

அவரவர் அறிவியல் கண்டு பிடிப்புக்கான ஆதார அடிப்படைகளிலே இருந்த ஒற்றுமைக் கருத்துகளைச் சுட்டிக் காட்டி, பலரும் பார்த்துப் பரிகசிக்கும் அளவுக்கு உரத்த குரலில் கத்திக் கூச்சல் போட்டுக் கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நியூட்டன் முகத்தை, ஹாக் பார்க்கவே மறுத்தார். ஹாக் எதிரே

3.