பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 蕾势笠

குறைகள் கிடைக்கும், அதை விமரிசனம் செய்து அவரது புகழுக்கு இழுக்கு தேடலாம் என்று விஞ்ஞான அறிஞர்களே துடி துடித்துத் துருவி துருவித் தேடி வந்தார்கள்’

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த கான்ஸ்ட் டான்டின் ஹைகென்ஸ் என்ற மாபெரும் விஞ் ஞானி, கைக் கெடிகாரத்தை உலகுக்குக் கண்டு பிடித்துத் தந்த விஞ்ஞானி ஆவார்.

'நீட்சியின் அளவு, விசைக்கு விகித சமமாக இருக்கும் என்ற வில் தராசு தத்துவத்தைக் கண்டு பிடித்த ராபர்ட்ஹாக் போன்ற மாபெரும் விஞ்ஞான விற்பன்னர்கள் எல்லாம்கூட, சர் ஐசக் நியூட்ட னிடம் பெரும் அறிவுப் போராட்டமே ஒயாது புரிந்து வந்தார்கள்.

நியூட்டன் கண்டுபிடித்த விஞ்ஞானப் புதுமைகள் பலவற்றில், ஒவ்வொரு விஞ்ஞானியின் ஆராய்ச்சி யும், செயல் முறை ஆதாரங்களும் கலந்திருக்கின்றன என்று பல விஞ்ஞானிகள் குறை கூறினார்கள்.

உதாரணமாகக் கூறுவதான்ல், நியூட்டனுக்கு முன்பே புவி ஈர்ப்புத் திறனைப் பற்றி ராபர்ட் ஹாக் ஆய்வு செய்திருந்தார்.

வான வெளியில் உள்ள பொருள்கள் எல்லாம் உருண்டை வடிவமானவை.

அவற்றுள் பல, தம்முடைய அச்சுகளில் தம்மைத் தாமே சுற்றிச் சுழல்கின்றன.

'அவற்றுக்கு எல்லாம் ஈர்ப்புத் திறன் இல்லாமல் இருக்குமானால், அவற்றோடு உறுதியாக இணைக்கப்படாமல் உதிரியாக உள்ள பகுதிகள்