பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானச் சிக்கல்கள் புவி ஈர்ப்பின் அடிப்படை விதிகளை அறிந்து நியூட்டன் கூறினார்.

'வகையிட்டு துண்கணிதம், தொகையிட்டு துண் கணிதம், என்ற கணித விதிகளைப் பற்றிய வகை முறைகளை நியூட்டன் விஞ்ஞானத் துறைக்கு வகுத்தார்.

ஒளி - இயல் துறையிலே அவர் உடல் சிலிர்க்கும் ஆராய்ச்சிகளை செய்து காட்டி நிருபித்தார்.

அதனால், ஒளியை எதிரொலிக்கும் டெலெஸ் கோப் ஒன்றை அவர் புதியதாக உருவாக்கிக் காட்டினார்.

அறிவியல் துறையிலே அவர் அடுக்கடுக்காக ஆய்ந்து கூறிய விஞ்ஞான கண்டு பிடிப்புகள் எல்லாம், விஞ்ஞான உலகில் பெரும் பரபரப்பை யூட்டின்.

அதனால், விஞ்ஞானத் துறையில் ஈடுபட்ட மேதைகளிலே கூட, ஒருவருக்கு ஒருவர் போட்டி களும் - மன மாச்சர்யங்களும் ஏற்படலாயின.

கணிதத் துறையிலே புலமை பெற்ற நிபுணர் களாக விளங்கிய வித்தகர்களிடையே, நியூட்டனது புதிய கண்டு பிடிப்புகள் சில கருத்து மாறுபாடுகளை அடிக்கடி தோற்றுவித்தன.

அழுக்காறு கொண்டவர்கள் அனைவரும், அவரது அரிய சாதனைகள் ஆண்டாண்டுகள் புதிய புதிய வடிவம் பெறுவதை எதிர்த்தும் குறை கூறியும் வந்தார்கள்.

நியூட்டனுடைய எந்த சாதனையிலே என்ன