பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 鳕懿

உலக விஞ்ஞானிகளிடையே எழுந்த சிந்தனைச்

சிக்கல்களை அறுப்பதற்கு, இந்த சொல்லடுக்கு மிகத் திறமையாகப் பயன்படுவதை நாம் பார்க்கிறோம்.

இராபர்ட் ஹாக் பயன்படுத்திய இந்த சொல் லடுக்குக்கு, ஒவ்வொருவரிடையே எழும் சிந்தனைச் சிக்கல்களை அறுத்திட உதவியாக அமைவதை நோக்கும்போது, அவரது அறிவின் கூர்மையை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது அல்லவா?

எனவே, அற்புதமான அடிப்படையை அமைத்து எழுதப் புகும் எழுத்தாளர்கள் எல்லாம், அந்தச் சொல்லடுக்கைப் பயன்படுத்தி எழுதுவார்களானால், எழுத்துலகத்தில் எழும் விபரீத விளைவுகள் யாவும் எழ வழி. இருக்காது.

இராபர்ட் ஹாக்கால் கண்டு பிடிக்கப்பட்ட இந்த சொல்லடுக்கு, எழுத்துலகத்துக்கு அறிமுகப்படுத்தப் பட்ட ஒரு புதுமையான நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கி வருகிறது

இருப்பினும், அந்த சொல்லடுக்குக்குரிய உண்மை யான பொருள் அதுவல்ல என்பதை இராபர்ட் ஹாஜிக்கே மறுக்கிறார்.

அப்படியானால், அந்த சொல்லடுக்குக்கு உரிய உண்மையான பொருள்தான்் என்ன? எதற்காக அந்த புதிரை உருவாக்கி உலகுக்கு வழங்கினார்?

விஞ்ஞானிகளிடையே எழும் சிந்தனைச் சிக்கல்களை அறுப்பதற்கு அந்த சொல்லடுக்கு பயன்பட்டாலும், அது மீள் சக்தியைப் பற்றிய ஒரு

தத்துவமாகவே இன்றும் விளங்கி வருகிறது.