பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

褒粤 விஞ்ஞானச் சிக்கல்கள்

மீள்சக்தி தத்துவம் என்றால் என்ன? அதாவது, 'நீட்சியின் அளவு, விசைக்கு விகித சமமாக இருக்கும் என்பதே அந்த தத்துவமாகும்.

ஒரு பவுண்டு விசை, ஒரு வில்லை ஒர் அங்குலம் துரரம் நீளச் செய்தால், இரண்டு பவுண்டு விசை, அதை இரண்டு அங்குல தூரம் நீளச் செய்யும். பத்து பவுண்டு விசை, அதைப் பத்து அங்குல தூரம் நீளச் செய்யும். அந்த வில்வின் தாங்கும் திறன் எவ்வளவோ, அந்த வலிமைக்கு உட்பட்டு, இப்படியே மற்ற எல்லா விசைகளுக்கும் அமையும்” என்பதே ஹாக் கண்டுபிடித்த தத்துவமாகும்.

இந்த விதிக்குப் பெயர் ஹூக் விதி என்பதாகும். அந்தப் பெயராலேயே அது இன்றும் விஞ்ஞான உலகத்தால் அழ்ைகப்பட்டு வருகிறது.

இந்த தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இராபர்ட் ஹாக் ஒரு வில் தராசைக் கண்டு பிடித்தார்.

அந்த தராசையும், ஒர் இரும்புக் குண்டின் எடையை அறிந்து வைத்துக் கொண்டு, அவற்றையும் செயிண்ட் பால் கோயிலின் உச்சிக்கு எடுத்துச் சென்றார்.

உயரம் செல்லச் செல்ல புவி ஈர்ப்பின் இழுப்பு குறைந்து வருவதைக் கண்டு நிருபித்தார்.

'இந்தப் பரிசோதனையின் வாயிலாக அவர், பூமி தனது நடுப் பகுதிக்கு அருகில் உள்ள பொருள்களின் மீது அதிகக் கவர்ச்சியை, புவி ஈர்ப்புத் திறனைச் செலுத்தி வருகிறது. அதை விட அப்பால் உள்ள பொருளின் மீது அவ்வளவு கவர்ச்சியைச்