பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 狩懿 செலுத்தாது” என்ற ஒரு புதிய தத்துவத்தை உருவாக்கி நிருபித்தார்.

வில்லின் தன்மைகளை ஹாக், இவ்வாறு ஆராய்ந்து கூறியதனால் தான்், நாம் அனைவரும் இன்று கையிலே கட்டிக் கொள்ளும் கடிகாரத்தைப் பெற்றுள்ளோம்.

இவ்வளவு அரும்பாடுபட்டு அவர் கைக் கடிகாரத் தத்துவ விதியைக் கண்டு பிடித்தும், அவருக்கு அது புகழைத் தேடித் தரவில்லை.

ஏனென்றால், கி.பி. 1575 - ஆம் ஆண்டிலே பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி கிரிஸ்டியன் ஹைகென்ஸ் என்பவர், இப்படிப்பட்ட திட்டம் ஒன்றைக் கண்டுபிடித்து அதை உலகின் முன்னே வைத்து விட்டார்.

அதற்கு பிரான்சு நாட்டு அரசாங்கத்தின் அனுமதியையும் - சான்றிதழையும் அவர் பெற்று விட்டார்.

கைக் கடிகாரத் தத்துவத்தைத் தான்்தான்் முதன் முதல் கண்டு பிடித்தது என்பதை ஹூக்கால் நிருபிக்க முடிந்தது.

ஆனால், ஹைகென்ஸ் பெற்றிருந்த உரிமையின் முன்னால், ஹாக் கண்டுபிடிப்பு ஏமாற்றமே கண்டது.

அதற்குக் காரணம், ராபர்ட் ஹாக் கண்டு பிடித்த தத்துவ விதியை, அவர் உடனடியாகச் செயல் முறையில் கொண்டு வராமல் அலட்சியமாக இருந்து விட்டதே யாகும்.