பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 鳢3葛 காரணமாக வந்து போனவன்தான்், அவனைக் கொலை செய்த கொலைகாரன் என்று தெரிந்தது.

தனது அறிவியல் சாதனையின் முழு விவரங்களைக் கொண்ட சூத்திரங்களை விலைக்குத் தரமாட்டேன் என்று மறுத்தான்் அந்த விஞ்ஞானி!

அதனால், அந்த விஞ்ஞானியை, தனது விட்டிற்கு, கொலைகாரன் விருந்தாளியாக வரவழைத்தான்். மதுவிலே நஞ்சைக் கலந்து, விஷ ஊசியேற்றிக் கொலை செய்தான்். விஞ்ஞானியிடமிருந்த முழு விவரங்களையும் திருடிக் கொண்டான். இறந்த விஞ்ஞானி பிணத்தை இறுதிவரைப் போலீசார் துப்பறிந்ததால் கண்டு பிடிக்கப் பட்ட உண்மை இது. இந்த துப்பறியும் கதையிலே வந்த போலீஸ்காரர், கிரேக்கப் பேரறிஞரான தேவிஸ், ஜியோமெட்டிரிக் கணிதத்திற்காகக் கண்டுபிடித்த விதியைப் படித்தவர்.

முத்ன் முதலாகத் திருவிழாவிலே ஒரு பிணம் - மற்றவன் மீது சாய்வதைக் கண்டதும், அவசரப்பட்டு அதைப் போய் விசாரியாமல், அதன் போக்கிலேயே சவத்தைச் சுற்றுலா வரச்செய்து, அதனைப் பின் தொடர்ந்தே துப்பறிந்து வந்தார் போலீசார்!

ஒர் உடலின் குடி மயக்கச் சாய்வுக்கும், சவச் சாய்வுக்கும் உள்ள வேறுபாட்டினை - அவர் தூரத்தில் இருந்தவாறே உணர்ந்தார்.

அந்தப் பிணத்தின் பயணம் எப்படிச் செல்கிறது என்பதைத் தொடர்ந்து, அதனைப் பின்பற்றிய படியே கிரேக்கக் கணிதமேதை தேவிஸ் தத்துவப்படி சென்றார் - அந்த போலிஸ்காரர்!