பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனையாளர் சிலர்

7

இந்தியாவில் அக உலகைப் பற்றி சித்தார்த்தர் ஆராய்ச்சி நடத்திக்கொண்டு இருந்ததைப் போலவே உலகின் வேறு சில பகுதிகளில் புற உலகைப் பற்றிய ஆராய்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்தப் புற உலக விஞ்ஞானத்தைப் பொருளியல், பௌதிகம் போன்று பல பெரும் பிரிவுகளாக வகுக்கலாம்.

பொருளியல் பகுதியின் முன்னேற்றத்திற்கு வித்திட்டது "பொருள்கள் எதனால் ஆனவை?" என்ற கேள்வியாகும். இந்தக் கேள்வியைக் கிளப்பியவர் ஐயோனியத் தீவுகளைச் சேர்ந்த தேல்ஸ் என்பவர். படிப்படியாக முன்னேற உலகம் எவ்வளவு இன்னற் பட்டது என்பதைத் தெரிந்துகொள்ள விஞ்ஞானிகள் எவ்வளவு அல்லற்பட்டனர் என்பதைத் தெரிந்து கொள்ளுதல் வேண்டும். விஞ்ஞானத்தின் முதல் படியாகிய இரசவாதம் பற்றி நாம் சற்று ஆராய்வோம். அத்துறையில் வேலை செய்தவிஞ்ஞானிகள் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

முதன் முதலில் இரசவாதம் பற்றிய ஆராய்ச்சியைத் தொடங்கியபோது சிலர் ஆர்வ மிகுதியால் இத் துறையில் புகுந்தனர். வேறு சிலரோ ஆடம்பரத்திற்காகவும், குறுகிய முதலீட்டால் பெருமளவு பொருள் ஈட்டவுமே இத்துறையில் முனைந்தனர். முதல் வகையைச் சேர்ந்தவர்களை உண்மை விஞ்ஞானிகள் என்றும் இரண்டாம் வகையினரை இரசவாதிகள் என்றும் குறிப்பிடலாம்.

அந்த நாளில் இரசவாதி என்ன நினைத்தான், எப்படித் தன் முயற்சியைத் தொடங்கினான், எந்தச்