பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

விஞ்ஞானத்தின் கதை

சாதனங்களை ஆராய்ச்சிக்காகப் பயன்படுத்திக் கொண்டான் என்று சரித்திர வாயிலாக எதுவும் நமக்குத் தெரிவதாயில்லை. இரசவாதம் இரகசியக் கலையாகவே கண்காணிக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் பற்பலவாக இருந்தன என்றாலும் புதிய எண்ணங்களுக்கு வரவேற்பளிக்காமை, கவைக்கு உதவாத பொறாமை என்ற இரண்டும் குறிப்பிடத் தக்கவை.

உண்மை விஞ்ஞானிகள் அங்கங்கே சிலர் இருந்தனர். கில்செஸ்டரில் கி.பி. 1214-ல் பிறந்த ரோஜர் பேக்கன் என்பவர் தனது உழைப்பின் காரணமாகத் துப்பாக்கி வெடி மருந்தைக் கண்டுபிடித்தார். உரு பெருக்கிக் காட்டும் கண்ணாடி (Lens) யையும் இவரே கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது. வெடி மருந்தைத் தயாரிக்க உப்பு வகை ஒன்றையும், கரியையும், கந்தகத்தையும் ஒன்று சேர்த்து தான் உபயோகித்த வகையைத் தன்னுடைய நூல் ஒன்றில் பேக்கன் குறிப்பிட்டிருக்கிறார். அதே மூலப் பொருட்களைக் கொண்டு தான் 1327-ஆம் ஆண்டில் ஆங்கிலச் சேனை வெடி மருந்தைத் தயாரித்தது. பேக்கன் முதன் முதலில் வெடி மருந்தைத் தயாரிக்க வில்லையென்றும், அவர் கிழக்கத்திய நாடுகளில் பிரயாணம் செய்த பின்பே தயாரித்தார் என்றும், அதனால் அவருக்கு முன்பே கீழ் நாடுகளில் வெடி மருந்து உபயோகத்தில் இருந்திருக்க வேண்டும் என்றும் சிலர் அபிப்பிராயப்படுகின்றனர்.

பேக்கனைப் பற்றிய சுவையான செய்தி ஒன்று கூறப்படுகின்றது. இவர் ஒரு மந்திரவாதியெனச் சிறைப்படுத்தப்பட்டார். தனது விஞ்ஞான ஆராய்ச்சி