பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனையாளர் சிலர்

9

 முழுமையும் தவறு என்று மனச்சான்றுக்கு எதிராக அவர் வாக்குமூலம் வெளியிட்ட பின்பே அவருக்கு விடுதலை கிடைத்தது. எவ்வளவு பரிதாபத்திற்குரிய செய்தி! சைத்தானோடு சேர்ந்துகொண்டு மாயா ஜாலங்கள் புரிவதாக அவரது துணைப் பாதிரிமார்கள் குற்றம் சாட்டியதன் விளைவே இந்தச் சன்மானம்!

பேக்கன் இறந்து சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் இத்தாலி நாட்டிலுள்ள வின்சி நகரில் லியானார்டோ என்ற விஞ்ஞானி பிறந்தார். சரித்திர ஏடுகளில் இவருடைய பெயர் லியானார்டோ-டா-வின்சி என்று நமக்கு அறிமுகம். இவர் உலகப் புகழ் பெற்ற ஓவியர்; பொறியியல் வல்லுநர்; கணக்கு வல்லுநர்; ஒரு பாடகர். இந்தக் 'கூட்டுச் சரக்கு' விஞ்ஞானத்திற்குச் செய்த சேவை சிறப்பானது. இன்றைய பொறியியல் வல்லுநரும்கூட வியக்கும்படியான பல ஓவியங்களை வரைந்து, அதன் மூலம் ஆராய்ச்சி நடத்தி விஞ்ஞானத்தை வாழ்வுக்குப் பயன்படத் தக்கதாக அமைத்தவர் இவர். வானவூர்தியின் அமைப்பை அன்றே கண்டவர் இவர். இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பெட்ரோல் போன்ற ஏதேனும் ஒன்று இவருக்குக் கிடைத்திருக்குமாயின் வானவூர்தியை அன்றே அவர் பழக்கத்திற்குக் கொண்டு வந்திருப்பார் என்று விஞ்ஞான வரலாற்று ஆசிரியர் பலர் கருதுகின்றனர்.

விஞ்ஞானப் பாதையில் பதினாறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு திருப்பம் காணப்பட்டது. இத் தொடர்பில் நமக்கு அறிமுகமாகும் முதல் விஞ்ஞானி பாராசிலஸ். இவர் சுவிட்சர்லாந்தில் கி.பி. 1493-ல்