பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

விஞ்ஞானத்தின் கதை

பிறந்தார். இவர் சிறிது காலம் பேல் பல்கலைக் கழகத் (Basle University) தில் கல்வி பயின்றார். அங்கே மேலதிகாரிகளோடு ஏற்பட்ட மனப் பிணக்கால் அக் கழகத்தைவிட்டு வெளியேறினார். ஐரோப்பா முழுவதும் சுற்றி அலைந்தார். அங்கங்கே அவருக்கு விஞ்ஞானம் பற்றிய ஆராய்ச்சித் துணுக்குகள் கிடைத்தன. மருத்துவம் பார்த்தல், சோதிடம் பார்த்தல் முதலிய வேலைகளால் அவர் தம் வாழ்வை நடத்தி வந்தார். மூர்க்கத் தன்மை, பிறருடன் ஒத்துழையாமை போன்ற தீய குணங்கள் அவரது முன்னேற்றத்தைப் பெரிதும் பாதித்தன. எங்கு போனாலும் வீண் சச்சரவே அவரது துணை. ஆனாலும், "அவர் பலே கைராசிக்காரர்!” என்று விரைவில் பெயர் பெற்றார். துணையாக வேலை செய்த சில விஞ்ஞானிகளின் ஆதரவால் 1526-ம் ஆண்டில் பேல் பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

அங்கும் கர்வம் தலையெடுத்தது. எவரையும் எடுத்தெறிந்து பேசினார். தன்னை மிஞ்சிய அறிவாளி எவனுமில்லை என்று பேசத் தொடங்கினார். உலகத்திற்கு அறிவொளி காட்டத் தகுதி படைத்தவன் ஒருவன் உண்டென்றால் அவன் தன்னைத் தவிர வேறெவனும் இல்லை என்பது அவரது கருத்து.

மருத்துவத்தில் அவருக்கிருந்த கருத்து திடுக்கிடத் தகுந்தது. தன்னிடம் வரும் நோயாளிகள் முழு நலம் பெற வேண்டும், இல்லையேல் செத்தொழிய வேண்டும் என்ற முறையில் பல அபாயகரமான மருந்து வகைகளைக் கொடுத்து ஆராயத் தொடங்கினார். மருத்துவத்தில் அவருடைய வெற்றிகள் நன்கு விளம்பரப்