பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வேளாண்மை

25

பயிர்களை விளைவிப்பதே அது. கடல் நீரில் இத்தகைய வளர்ச்சிக்கு வேண்டிய உரச்சத்துக்கள் கலந்துள்ளன. கடல் நீரில் பயிரிடுவதில் நாம் முழு வெற்றி அடைந்தோமாகில் உலகில் உள்ள உணவுப் பஞ்சத்தையே இல்லாதொழிக்கலாம். உலகுக்கு என்றென்றும் தேவைப்படுவது உணவு. இத்துறையில் விஞ்ஞானிகள் முழுவெற்றி காண்பாராகில் மக்கள் அவர்களுக்கு என்றென்றும் கடமைப்பட்டவர்களே!

வேளாண்மையைப் பற்றி இவ்வளவு விபரமும் தெரிந்த பின்புதான் "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர்" என்ற குறளுக்கு உண்மையான பொருள் தெளிவாகிறது. வேளாண்மைக்குப் பிற்பட்டே உலகம் நாகரிகம் பெற்றது என்பதைப் பின் வரும் அத்தியாயங்கள் நெடுகிலும் காணலாம். எனவே நாகரிகம் என்னும் குழந்தை வேளாண்மை ஈன்ற செல்வமாக விழித்தது—— சற்றேறக் குறைய ஆறாயிரம், ஏழாயிரம் ஆண்டுகட்கு முன்னதாகும்.


————