பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

விஞ்ஞானத்தின் கதை

அன்று அவர்கள் நடிக்கவில்லை. அதன் விவரம் அவர்களுக்கு அன்றைய நிலையில் புரிந்துகொள்ள முடியாததாக இருந்ததால் அதற்கு மாறாக ஓர் உத்தியைக் கையாண்டார்கள். ஒவ்வொரு உணர்ச்சி பாவத்திற்கும் ஒரு முகமூடி தயாரித்தார்கள். அதை முகத்திலிட்டு நடிக்க வந்தால் அதைத் தாங்கியவனின் உணர்ச்சி பாவத்தை நாடகம் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்றைய நாடகங்களில் பயங்கர நிகழ்ச்சிகளும் இடம் பெறுவதுண்டு. துன்பியல் நாடகங்கள் உண்மையிலேயே துன்பியலில் முடியுமாம். உதாரணமாகக் கூறினால் மகாகவி ஷேக்ஸ்பியரின் 'ஜூலியஸ் சீசர்' என்னும் நாடகத்தைக் குறிப்பிடலாம். நாடகத்தில் ஜூலியஸ் சீசர் கொல்லப்பட வேண்டும். எனவே அந்தப் பாத்திரம் தாங்கும் நடிகன் உண்மையிலேயே கொல்லப்படுவான். ஆனால் இத்தகைய பரிதாபம் நெடுங்காலம் நீடிக்கவில்லை.

கோவில்கள் எழுச்சி பெற்றபோது சிற்பம், சங்கீதம், சித்திரம் முதலியவை கோவிலுக்குள் இடம் பெற்றது போல நாடகமும் கோவிலுக்குள் புகுந்து கொண்டது. கடவுள் தன்மையை விளக்கும் நாடகங்கள் அதற்குப் பின் உருவாயின.

பிற்காலத்தில் நாடகக் கலை வெகுவாக வளர்ச்சி பெற்றது. பணக்காரர்களாலும், மன்னர்களாலும் ஆதரவு தரப்பட்டு வளர்ந்து வந்த நாடகங்கள் அண்மையில் பொதுமக்களின் ஆதரவிலே வளரத் தொடங்கியது. பொதுமக்களே முனைந்து நின்று கலையரங்கங்கள் ஒவ்வொரு ஊரிலும் நிறுவ உதவினார்கள். இதனால்