பக்கம்:விஞ்ஞானத்தின் கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலை

59

நாடகக் குழுக்கள் பெருகி, மக்களின் இரசிகத் தன்மை பெருகி வாழ்வின் கருத்துக்களும் உயர்ந்தன.

மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட பின் ஒரே நாடகத்தை ஒரே சமயத்தில் பல ஊர்களில் பல கோடி மக்கள் பார்த்துக் களிக்க உதவும் சினிமா உருவாயிற்று. பொது மக்களின் இரசிகத் தன்மையை இது வெகுவாகப் பிரதிபலிக்கிறது.

சினிமாத் துறையோடு கூட ரேடியோவின் உதவியையும் நாம் மறப்பதற்கு இல்லை. நாடகக் குழு நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. அவர்கள் பேசும் பேச்சு மட்டும்தான் நமக்குக் கேட்கிறது. ஆனாலும் நாம் இரசிக்கிறோமே! இதன் நுணுக்கம் என்ன? நாடகத் துறையில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் திறன் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. நாளடைவில் வீட்டுக்கு ஒரு ரேடியோ இருக்கப்போவது நிச்சயம். இது மனித இனத்தின் இரசனையை வெளிப்படுத்தும் அளவு கோல். ரேடியோவில் இருக்கும் குறையை டெலிவிஷன் நிறைவு செய்கிறது. இனி நாடகக் குழுக்களை ஒரே சமயத்தில் ஒவ்வொரு வீட்டிலும் காணலாம்.


—————