பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

அவர்களுடைய வேதநூலில் ஆண்டவன் உயிர் களைப் புதிதாகச் சிருஷ்டி செய்ததாகக் கூறியிருக் கிறது. ஆனல் பாஸ்ட்டியரோ அப்படி உயிரில்லாத வற்றைக் கொண்டு உயிர்களை உண்டாக்க முடியா து என்று கூறுகிறார், அது எப்படி என்று கோபம் அடைந்தார்கள். அதற்குப் பாஸ்ட்டியர் ‘அவ்வி தம் வேத நூலில் கூறியிருக்கலாம், ஆனால் நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லையே, விஞ்ஞ ன ஆராய்ச்சிதானே செய்தேன். அது பிாக்யட்ச மாகக் கூறுவதை ஆட்சேபிப்பது எப்படி?’ என்று. கூறினர். அதோடு அவருக்கு ஆராய்ச்சி செய்வதில் பிரியமே யொழிய, ஆட்சேபத்துக்குப் பதில் கடறி வாதம் செய்வதில் பிரியம் கிடையாது. அதனல் அங்க வேலையைப் பி ற ரி ட ம் வி ட் டு விட்டு, ஆராய்ச்சியிலேயே மீண்டும் ஆழ்ந்து விட்டார்.

அவ்விதம் சிலர் பாஸ்ட்டியர் கண்டு பிடித்துக் கூறிய உண்மைக்கு விரோதமாக ஆட்சேபங்கள் எழுப்பிய போதிலும், அந்த உண்மையால் உலகத் துக்கு உண்டான நன்மைகள் அளவிறந்தன வாகும். அவற்றுள் பிரதானமானதை மட்டும் கவனிப்போம்.

ஐரோப்பாவில் ஆயிரக்கணக்கான வருஷங்க ளாக வியாதியஸ்தர்களுக்கு ஆப்பரேஷன்கள் செய்யப்பட்டு வந்தன. ஆனல் அந்த ஆப்பரேஷன் புண்கள் அநேகமாக அழுகிப் புரையோடி அபாயமே விளைவித்து வந்தன. அதனல் வைத்தி யர்களும் நோயாளிகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்கள். II6