பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இப்படிக் கம்பதிகள் இருவரும் ஆராய்ச்சியில் மூழ்க வேண்டியிருந்ததால், குழந்தையைக் கவனிக் துக் கொள்வதற்காக ஆயாள் ஒருத்தியை அமர்த் திக் கொண்டார்கள். ஆனல் பீயருடைய வருவா யோ மிகவும் சொற்பம். அதல்ை 1898ல் குறைந்த வேலையும் அதிக வருவாயுமுள்ள ஆசிரியர் பதவி ஒன்று காலியான பொழுது அதைச் சர்வகலாசாலை யாரிடம் வேண்டினர். ஆனல் அவர்கள் அதைக் கொடுக்காமல் அதிக வேலையும் குறைந்த வருவாயு முள்ள பதவியை அளித்தார்கள். அதல்ை அம்மை யாரும் ஒரு பெண் பாடசாலையில் ஆசிரியப் பத வியை ஏற்றுப் பொருள் தேட வேண்டியதாயிற்று. இவர்களுடைய பதவிகள் அவர்களுடைய செல வுக்கு வேண்டிய பணத்தை அளித்த போதிலும் ஆராய்ச்சிக்கு வேண்டிய நேரத்தையும் பலத்தை யும் விழுங்கியே வந்தன. ஆலுைம் அதற்காக அவர்கள் வருந்தாமல் உண்ணவும் உறங்கவும் மறுத்து உடல் நலனை அலட்சியம் செய்து ஆரா ய்ச்சி வேலையை நடத்தி வந்தார்கள்.

அதோடு கூரி தேவியார் பிரிக்க விரும்பிய வஸ்து அபாயகரமானதும் ஆகும். அவருடைய கணவர் ஒரு சமயம் தம்முடைய கைகளை வேக வைத்துக் கொண்டார். அதுவுந்தவிர அந்த வேலைக்கு உடம்பு பலமும் அதிகமாகத் தேவை. அம்மையார் சில சமயங்களில் தார் கட்டி உருகும் போது அதை நீண்ட கனமான இருப்புத் துடுப் பால் நாள் முழுவதும் கிளறிவிட்டுக் கொண்டே 148