பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

வில்லை. அதற்கு மேல் அவன் செய்யக்கூடியது. ஒன்றுதான் உண்டு. அதையே செய்து விட்டான். அவரைத் தன்னுடைய வாளால் ஒரு குத்துக் குத்தி விட்டான். அவர் அ ப் ப டி யே தம்முடைய ஆராய்ச்சி ஒட்டின் மீது சாய்ந்துவிட்டார். ஐயோ! உலகம் கண்ட அற்புதமான மேதாவிகளில் ஒருவர் இக்க விதமாக உயிர் துறந்தார் !

இந்த விஷயத்தை அறிந்ததும் மார்ஸெலஸ் அ ைட ங் த துக்கத்துக்கு அளவே கிடையாது. ‘ஐயோ! என்ன தவறு செய்துவிட்டேன்! என்று புலம்பினன். அந்தப் போர்வீரனைப் பாராமல், அட கொலைக்காரப் பாவி என்று திரும்பிக் கொண்டான். ஆர்க்கிமிடீஸின் சவத்தை அதிக மரியாதையோடு அடக்கம் செய்வித்தான். அவ. ருடைய குடும்பத்தாருக்கு வேண்டிய உதவிகள் செய்தான். அன்று முதல் இன்று வரை, அவரு டைய பெயர் அழியாமல் அறிஞர்களால் போற்றப் பட்டு வருகிறது. அவருடைய பெயரை யாரும் மறக்க முடியாது. அவ்வளவு அாரம் அது நம் முடைய நாகரிகத்துக்கு அஸ்திவாரம் ஆகிவிட்டது.

1()