பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

இந்தக் கேள்வியைக் குறித்துச் சிங்தித்துச் சிந்தித்து அணுமுதல் அண்டம்வரை எங்கும் ஒரு ஆகர்ஷண சக்தி சர்வ வியாபகமாய் இருக்கும் தத்துவத்தைக் கண்டார். ஆப்பிள் பழம் மேலே போகாமல் கீழே விழுவதும் அண்ட கோளங்கள் ஒன்ெேருடான்று மோதிக்கொள்ளாமல் ஒரேவித மாகச் சுழன்று நிலைபெற்று கிற்பதும் இந்த அற்புத சக்தியால்தான்.

இந்த ஆகர்ஷண சக்தியிருப்பதால்தான் பூமி யானது ஒழுங்காகச் சூரியனேச் சுற்றி வருகிறது. இல்லையெனில் பூமியானது வான வெளியில் எங் கேனும் ஒடி அழிந்து போயிருக்கும். நம்மையெல் லாம் காப்பாற்றி நிற்பது இந்தச் சக்தி தான். நாம் கயிற்றில் கல்லைக் கட்டிச் சுழற்றுவதுபோல சூரியனும் பூமியைக் கண்ணுக்குப் புலப்படாத சக்திச் சங்கிலியாற் கட்டிச் சுழன்று வரும்படி செய்து கொண்டிருக்கிறது.

பூமியானது மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில் தன்னைத்தானே சுழன்று கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் அதன் மீதுள்ள நாமும் மற்றப் பொருள்களும் விழாமலிருந்து வருவற்குக் காரணம் பூமியின் ஆகர்ஷண சக்தியே ஆகும்.

இந்தச் சக்தியைப் பற்றி கியூட்டன் இரண்டு உண்மைகள் கூறினர்

1. நிறை கூடினுல் சக்தி கூடும்.

2. துாரம் கூடினுல் சக்தி குறையும். இப்பொழுது பூமியும் சந்திரனும் பாஸ்பரம் இழுத் 54