பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்லியம் ஹார்வி

ஆல்ை இவ்விதம் யுத்த களத்துக்கு அருகே சாதாரணமாக உட்கார்ந்து பீரங்கி முழக்கத்தி ளிைடையே வை க் திய நூ. லே வாசித்துக்கொண்

டிருக்க இந்த அபூர்வமான வைத்தியர் யார்?

இவர்தாம் உடம்பில் ரத்தமானது எந்த வித மாக ஒடுகிறது என்று கண்டறிந்து கூறிய மகான் வில்லியம் ஹார்வி என்பவர் ஆவார். சூரியன் பூமியைச் சுற்றவில்லை, பூமிதான் சூரியனைச் சுற்று கிறது என்று கோப்பர் கிக்கஸ் கூறியது வான சாஸ்திரத்து அஸ்திவாரமாயிற்று. பிரபஞ்சத்தில் காணப்படும் வஸ்துக்களிடையே துல் லிய மா ய் அளங்து கூறக்கூடிய முறையில் ஆகர்ஷண சக்தி ஒன்று அமைந்திருக்கிறது என்று கியூட்டன் கூறி யது. பெளதிக சாஸ்திரத்திற்கு அஸ்திவாரமாயிற்று. அதேபோல் ஹார்வி ரத்த ஒட்ட முறையைக் கண்டு கூறியதுதான் வைத்திய சாஸ்திரத்திற்கு அஸ்தி வாரமாகும். அவ்விதம் ஹார்வி ரத்த ஒட்ட முறை யைக் கண்டு கூரு திருந்தால் அவருக்குப் பின் ரக் தம் சம்பங்கமாகக் கண்டுபிடிக்கப்பட்ட அரிய பெரிய விஷயங்கள் எல்லாம் அறிய முடியாமலே இருக்கும். ரத்தம் தானே உயிர்க்கு ஆதாரம்? அங்கப் பிரதானமான விஷயத்தைத் தெரிந்து கொள்வதற்கான அறிவுத் திறவுகோலை ஹார்வியே

அளித்தார்.

o அனேக அறிஞர்கள் பல உண்மைகளைக் கண்டு கூறியிருக்கின்றனர். ஆனல் அவைகளை அவர்களாகவே கண்டு கூறினதில்லை. அவர்கள்

79