பக்கம்:விஞ்ஞானப் பெரியார்கள்.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விஞ்ஞானப் பெரியார்கள்

ஏணிப்படியில் ஏறி மாடிக்குச் செல்வதுபோலத் தங் களுக்கு முன்னிருந்த பெரியோர்கள் செய்துள்ள ஆராய்ச்சிகளைக் கொண்டே அந்த உண்மைகளைக் கண்டறிந்தார்கள். ஆனல் ஹார்விக்கு அவருக்கு முன்னிருந்தோர் ஆராய்ச்சிகள் அதிகமாக உதவி செய்ய வில்லை. அவர் தாமாகவே ஆராய்ந்து ஆராய்ந்து அறிவுக் கூர்மையால் கண்டுபிடித்தார்.

இத்தகைய பெரியார் இங்கிலாந்து தேசத்தில் போக் ஸ்டோன் என்னும் ஊரில் 1578-ம் வருஷம் ஏப்ரல் மாதம் முதல் தேதியன்று பிறந்தார். அவ ருடைய தங்தை பெரிய வியாபாரியாய் இருந்த படி யால் அவர் ஹார்வியை முதலில் கான்டர்பரி பாட சாஜலக்கும், பின்னல் காம்பிரிட்ஜ் சர்வகலாசாலைக் கும் அனுப்பிவைத்தார்.

16-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இத்தாலி தேசத்தில் வெளாவியஸ் என்று ஒரு பெரிய வைத் தியர் இருந்தார். அவர் தமது இருபத்தி மூன்றாவது வயதிலேயே பாதுவா சர்வசலாசாலையில் சத்திர சிகிச்சை ஆசிரியராக நியமனம் பெற்றாரர். அவர் தாம் ஐரோப்பிய வைத்திய சாஸ்திரத்துக்கு அஸ் திவாரம் அமைத்தவர். அவரிடம் கல்விபயின்ற ஜாண்கேயஸ் என்பவர்காம்பிரிட்ஜ் சர்வகலாசாலை யில் கேயஸ் கலாசாலை என்ற பெயருடன் ஒரு கலா சா8ல அமைத்தார். அந்தக் கலாசாலையில்தான் ஹார்வி நான்கு வருஷம் கல்வி பயின்று வந்தார்.

அதன் பின் 1597-ம் வருஷத்தில் அக்காலத்தில் வைத்தியக் கல்வியில் தலைசிறந்த சர்வகலாசாலை

S()