பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

113


முன்பாக வைத்து, "பாருங்கள் அந்தப் பூச்சிகளை, உயிரோடு இருக்கிறதா இல்லையா என்று கேட்டார்.

"உயிரோடுதான் இருக்கிறது" என்றார் முதலாளி.

பிறகு தான் ஆராய்ச்சி செய்து வைத்திருந்த சாய இரசாயனப் பொருளின் மீதியை அந்த பெட்டியிலே ஊற்றினார்.

அடுத்த நொடியிலே அந்தக் கிருமிகள் அத்தனையும் இறந்து கிடந்ததை முதலாளிக்கு டாக்டர் எர்லிக் காட்டினார்.

அப்போதுதான் சாய முதலாளி பால் எர்லிக்கை நம்பினார். தட்டிக் கொடுத்தார்! இன்றுவரை நாம் அவருக்குச் செய்து வந்த உதவிக்கு மரியாதை ஏற்பட்டு விட்டது என்று மகிழ்ந்தார்.

டாக்டர் பால் எர்லிக், மனித உடலிலே ஊறு விளைவிக்காமல் பிணிகளை உருவாக்கும் கொடுமை மிக்க கிறுமிகளை எல்லாம் ஒரே நொடியில் சாகடிக்கின்ற இரசாயனப் பொருளைக் கண்டு பிடித்துவிட்டார். என்ற செய்தி உலகெங்கும் கொடிகட்டிப் பறந்தது. நோய்க் கிருமிகளை அழிக்கும் அந்த இரசாயனப் பொருளுக்கு அவர் சால்வர்சான் என்று பெயரிட்ட செய்தி உலகெங்கும் பரவியது.

நோய்க் கிருமிகளை அழிக்கும் அந்த இரசாயனப் பொருளுக்கு அவர் சால்வார்சான் என்று பெயரிட்டார். பால் எர்லிக் செய்த ஆராய்ச்சியை இகழ்ந்து பேசிய அறிவியல் வித்தகர்கள்கூட அவருடன் பேச வெட்கப்பட்டார்கள்.