பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

17


பிரெஞ்சு அரசு, இதனைக் கண்டு பிரான்ஸ் நாட்டின் நிலவரித் தீர்வைகளை வசூல் செய்யும் பெரிய அதிகாரியாக அவரை நியமித்தது.

ஒய்வு நேரத்தில் அறிவியல் ஆராய்ச்சிகளைப் புரிய அவருக்குப் போதிய நேரம் கிடைத்தது என்பதற்காகவே, லவாஸ்யே இந்தப் பதவியினை ஏற்றார்!

இவரை, மாரி என்ற மங்கை காதலித்து மணம் புரிந்து கொண்டார்.

கணவன் - மனைவி இருவரும், விஞ்ஞானத் துறையிலே அறிவுப் புரட்சியை உருவாக்குமளவிற்கு மேதைகளாக விளங்கினர் பிறநாட்டு விஞ்ஞான விற்பன்னர்கள், இவர்கள் இல்லம் நாடி, தங்களது ஐயங்களை அகற்றிக் கொள்ளுமளவிற்கு அறிவியல் துறையிலே சிறந்து புகழ் பெற்றனர்.

இந்த நேரத்தில், நெருப்பு என்றால் என்ன? என்ற தோர் ஐயம் அவர்களிடையே எழுந்தது.

எத்தனையோ ஆண்டுகள் விஞ்ஞானிகள் நெருப்பைப் பற்றி ஆராய்ந்து வந்திருக்கிறார்கள்.

பஞ்ச பூதங்களான, வான், நெருப்பு, நீர், நிலம், வாயு ஆகியவைகளிலே ஒன்று தான் நெருப்பு என்று விளக்கம் தந்தார்கள்- அக்கால விஞ்ஞானிகள்

உலகிலுள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் விட நெருப்புதான் முழுமையான ஒரு சக்தியை உடையது என்று அவர்கள் கண்டறிந்தார்கள்!

ஆதி காலத்தில் மனித இனம், தீயை ஒரு கடவுளாகவே கருதி வணங்கி வந்தது.