பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


பொழிந்ததால் மனம் உடைந்த அந்த மனித குல மாணிக்கம், சிறையிலே அனுபவித்த சித்ரவதைகளால் தனது சிந்தையை இழந்தார். மனமுருகி, நோயுற்று நடைப் பிணம் போல சக்தியற்றுக் கிடந்தார். மதகுருமார்கள் நிபந்தனை வெளியாறிற்று. அதுவும் நீண்ட நாட்களுக்குப் பிறகு, அவர் சிறையிலேயே இறந்து விடுவார் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள்.

வெசேலியஸ் நடைப் பிணமாய் நடமாடுவதைக் கண்டு வெளியே வந்தே சாகட்டுமே, என்று எண்ணி நிபந்தனையை உடனடியாகக் கூறினார்கள் மதப் பாதுகாப்பாளர்கள்.

என்ன நிபந்தனை தெரியுமா? வெசேலியஸ் எங்கோ ஓரிடத்துக்குக் கண்ணுக் கெட்டா துரத்திற்கு ஏதாவது புண்ணிய தலத்திற்குப் பயணம் போய் தான் ஆய்வு செய்ததற்குரிய தண்டனையை- மன்னிப்பைப் பெற - அங்கே கழிக்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.

இந்த இரக்கமற்ற நிபந்தனையின் பேரில் அந்த அறிவுலக வேந்தன் வெசேலியஸ் விடுதலை செய்யப்பட்டார் மதகுருமார்களால்

அவர் விடுதலையானவுடனேயே, ஒரு நொடிகூட அந்த ஊரில் தங்காமல், தான் பிறந்த மண்ணைவிட்டு, தான் வாழ்ந்த நகரைத் துறந்து தான் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகளை அப்படியே விட்டு விட்டு கண்ணீரும் கம்பலையுடன் புறப்பட்டார்.

உயிருக்குயிராக மதித்த மன்னனை மறந்தார். வெறுங்கையோடு புனித யாத்திரை புறப்பட்டார்.