பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

30


மாமேதையை, விடுதலை செய்ய வேண்டுமென்று விவசாயப் பிரபுக்கள் கூட்டம் கூடி வேண்டிக் கொண்டனர்.

இவ்வாறு, ஒவ்வொரு துறையிலே உள்ளவர்கள் அனைவரும் ல்வாஸ்யேவை விடுவிக்க வேண்டுமென்று விடுத்த அறிக்கைகளும், வேண்டுகோள்களும், பரிந்துரைகளும், பிரான்ஸ் நாட்டுக் கொடுங்கோல் ஆட்சியால் நிராகரிக்கப்பட்டுவிட்டன.

கி.பி.1794-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் நாளன்று காலை 6 மணிக்கு பிரான்ஸ் நாட்டு சிறைக் கூடத்திலே இருந்த தலைவாங்கும் கில்லட் இயந்திரம், லவாஸ்யேவினுடைய தலையை துண்டிரண்டாகத் துண்டித்துத் தூக்கியெறிந்தது - ரத்தம் சொட்டச் சொட்ட!

பிரான்ஸ் நாட்டின் தலைசிறந்த ஜனநாயகவாதியாக விளங்கி, புகழ் பெற்ற இலவாஸ்யே,குருதிச் சொட்டச் சொட்டத்தலை வேறு முண்டம் வேறாகத் துடி துடித்துச் செத்தார்.

தான் பிறந்த தாய் நாட்டிற்காக தளராது தயங்காது உழைத்த அறிவின் நாயகனை, பொறாமைப் பிடித்த கொடுங்கோலனான ஷான் போல் மாரா, கொடுவாளின் கூர்முனைக்குப் பலி கொடுத்து விட்டான்!

பிரான்ஸ் நாட்டின் மிகச் சிறந்த பொருளாதார மேதை இலவாஸ்யே-அரசியல் ஓநாய் ஒருவனால் பதை பதைக்கச் சாகடிக்கப்பட்டு விட்டார்.