பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ⃞

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


முடியும் என்பதற்கு அறிகுறியாக, அமெரிக்காவிலே ஒரு வெடிமருந்துச் சாலையை ஏற்படுத்தப் பேருதவி புரிந்த விஞ்ஞானப் புரவலனை, இரக்கமற்ற பிரான்ஸ் நாடு அராஜகத்தால் அழித்து விட்டது.

எல்லாவற்றிற்கும் மேலாக, விஞ்ஞான உலகுக்கே வித்தாக விளங்கியவனை, ஆய்வுக்கலைக்கே ஆசானாக அவதரித்தவனை, விஞ்ஞான ஆக்கப் பணிகளைப் பெற்று உலகம் ஈடும் எடுப்புமிலா நிலையை எய்த வேண்டுமென்று பேராசைப்பட்டவனை, பிரான்ஸ் நாடு படுகொலை செய்துவிட்டதே என்று விஞ்ஞான உலகம் தேம்பித் தேம்பிக் கண்ணிர்விட்டு அழுதபடியே தவித்தது. தாயில்லாப் பிள்ளையைப் போல!

ஆண்ட்வான் லோரான் இலவாஸ்யே துடிதுடிக்கத் தன் தலையை இழந்தார், அதற்காக உலகமே தேம்பி அழுகிறது.

உலகமே விஞ்ஞான மயமாக வேண்டும் என்ற வேட்கையால், அல்லும்-பகலும் அயராது உழைத்து அரும்பாடுபட்ட ஒரு விஞ்ஞான வித்தகன், நெஞ்சிலே சிறிதும் ஈவிரக்கமிலா மிருகமான ஷான் போல் மாரா என்பவனால் கொல்லப்பட்டு மாண்டு விட்டார்.

தலைவாங்கும் இயந்திரத்திலே அவர் தலையை வைத்துப் படுகொலை செய்ததோடு, அந்த மாடாதகனின் பொறாமை, மிருக வெறி ஒய்ந்து விடவில்லை.

படுகொலை செய்யப்பட்ட அந்த மாமேதையின் சவத்தை உடலை, ஊர் பேர் தெரியாத யாராலும் எப்போதும் அடையாளமே காண முடியாத கண்டுபிடிக்க முடியாதபடி, ஏதோ ஒரு சவக் குழியிலே