பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

43


மிடீஸ் அறிவைப் புரிந்து கொள்ள மறுத்தார்கள்! காரணம், அவனும் நம்மைப் போல ஒர் உள்ளுர்க்காரன் தானே , என்ற அலட்சிய மனோபாவமேயாகும்!

அவர்கள் உள்ளத்திலே உள்ள அறியாமையை ஆர்க்கிமிடீஸால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால், அந்த ஊர் மக்களது மனநிலைக்கு நாம் தளரக் கூடாது என்பதை மட்டும் உறுதியாகக் கொண்டிருந்தார்.

புதிய புதிய தத்துவங்களின் மூலமாக அளவிலா மகிழ்ச்சியைப் பெற்றுவிட்ட ஆர்க்கிமிடீசை, எந்த மக்கள் கேலியும் கிண்டலும் செய்தார்களோ, அவர்களைப் பார்த்து, "எனக்கு நிற்க ஓர் இடம் கொடுங்கள் நான் பூமியை நகர்த்தி விடுகிறேன் பாருங்கள்" என்று ஆவேசமாகவும்- ஆத்திரமாகவும் ஆர்ப்பரித்துக் கூறினார்.

ஆர்க்கிமிடீஸ் இவ்வாறு பேசியதைக் கேட்ட அதே மக்கள், நகைத்து நகைத்து, அவர் பேசிய உணர்ச்சியையும் - தோற்றத்தையும் கண்டு பழித்துப் பழித்துக் கேலி பேசினார்கள்.

"நகர்த்து வாராமே உலகத்தை! கடவுள் என்று நினைத்துக் கொண்டாரா தன்னை? பைத்தியக் காரனைப் போல பிதற்றுவதற்கும் ஒர் அளவு வேண்டாமா?” என்றெல்லாம் அந்த மக்கள் பேசினார்கள்.

இதற்குமேல் இவன் காட்டும் கண் கட்டு வித்தைகளை நாம் காணக் கூடாது! அது பாபம்! கடவுட் சக்தியையே மதிக்காமல் மீறுகிறான் என்று