பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞⃞47


அவரது சோதனையினால், வெட்ட வெளியிலே மேய்ந்து கொண்டிருந்த கால்நடைகள் சிலவும், மனிதர்களிலே ஒரு சிலரும் படுகாயமடைந்தார்கள்.

அவ்வளவு தான்! அவரது பகைவர்கள் கொதித் தெழுந்தார்கள். எங்கே ஆர்க்கிமிடீஸ்? எவ்வளவு திமிர் அவனுக்கு? ஏன் இப்படி ஊர் மக்களைப் பயமுறுத்துகிறான்" என்று கேட்க ஓடி வந்தார்கள்.

ஒரு சிலர், ஆர்க்கிமிடீசை உதைத்தார்கள்! வேறு சிலர், கிரேக்க மன்னனிடம் சென்று அவர் செய்த சம்பவங்களனைத்தையும் அடுக்கடுக்காக அறிவித்தார்கள்.

கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்ற இலக்கணத்திற் காளானான் கிரேக்கக் காவலன், மதித்தான் ஆர்க்கிமிடீசை! அனுப்பினான் அழைப்பை ஆட்கள் மூலமாக!

அரசன் ஆணையை ஏற்று ஆர்க்கிமிடீஸ் சென்றார். போனவன் திரும்பமாட்டான் என்று சைரக்கியூஸ் நகர மக்கள் பேசிக் கொண்டார்கள்.

பாவம், மரண தண்டனைக்காக ஒடுகிறான் பார்த்தாயா என்று பலர் அனுதாப ஒலியோடு பரிதாபப்பட்டனர்.

ஒழித்து விட்டார் கடவுள், உலகத்தையே நகர்த்திக் காட்டுகிறேன் என்று அகம்பாவம் பேசிய அக்கிரமக்காரனை! என்று சிலர்' கூறி, விலாப்புடைக்கச் சிரித்தனர்.

ஆர்க்கிமிடீசைக் கிரேக்க மன்னன், இரும்புக் கரம் கூப்பாமல் - கரும்புக் கரம் கூப்பி வரவேற்கிறான்.