பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

⃞⃞49


ரோமப் படைகள் மேற்கண்டவாறு சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தன.

போரின் போக்கை அவை திடீரென்று மாற்றிக் கொண்டன. இந்த மாற்றம் கிரேக்க மன்னனுக்கு மாபெரும் வெற்றியைத் தேடித்தந்தது.

ஆர்க்கிமிடீஸ், இவ்வாறு தனியொரு ஆளாக நின்று ஏதேதோ கண்டுபிடித்துக் கூறுவதும், அவற்றைப் பரிசோதனை செய்து பார்ப்பதும், வழக்கமாக அவரை எதிர்த்து வந்த அவ்வூர் மக்களுக்கு எரி நெருப்பில் எண்ணெயை ஊற்றுவது போலவும் இருந்தன.

அவர் ஒற்றை மேதையாக நின்று விஞ்ஞான உலகுக்கு சக்தியாக விளங்குவது, அறிவின் பகைவர்கட்கு பெரும் அபாயமாகவும், அழுக்காறாகவும் அமைந்தது.

ஆர்க்கிமிடீஸ் ஒரு சாத்தான் ஆர்க்கிமிடீஸ் ஒரு பேய், பேய்களின் தலைவன், விஞ்ஞானச் சூனியக்காரன். என்றெல்லாம் வதந்திகளைப் பரப்பி, சைரக்யூஸ் நகர மக்களை, அக்கம் பக்கம் வாழ்வோரை திசை திருப்பிடலானார்கள்.

இவற்றையெல்லாம் செவிமடுத்த அந்த அஞ்சா நெஞ்சம் படைத்த அறிவியல் மேதை, அவ்வூர் மக்களைப் பார்த்துச் சிரித்தார்.

“என்னைப் பைத்தியக்காரன் என்று ஏகடியம் பேசியவர்களே, எக்த்ள பைத்தியச் செயல்களை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லையா?