பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


நான் அறிவுப் பைத்தியம், விஞ்ஞானக் கிறுக்கன் தான், கணிதப் பைத்தியம் தான்"

"என் பைத்தியம், ஒரு நாள் உலகத்தைக் கல்லால் அடித்தே உங்களைப் பைத்தியக்காரர்களாக்கப் போகிறது. பாருங்கள்” என்று ஓயாது கதறிக் கத்தினான்- கூச்சலிட்டான்.

ஆர்க்கிமிடீஸ் கண்டு பிடித்த விஞ்ஞான சாதனைகளைப் பாராட்டுவோர் அப்போது யாருமில்லை- கிரேக்க மன்னன் ஒருவனைத் தவிர.

இவ்வாறே, அவர் தனது வாழ்நாளைப் பைத்தியக் காரர்களிடையே தள்ளிக் கொண்டு வந்தார்.

அறியாமைக்குப் பகையாக வேண்டிய அந்த நகரம், அறிவுக்குப் பகையாகிக் கொண்டே வந்தது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர், திடீரென்று ஒரு நாள் ரோமப் படைகள் மீண்டும் சைரக்யூஸ் நகரை முற்றுகையிட்டன.

மார்சேல்ஸ் என்ற அந்த ரோம் நாட்டுத் தளபதி, சைரக்யூஸ் நகரத்துக்குத் தனது படைகளை அனுப்பும் போது, ஒரே நிபந்னையை மட்டும் கடுமையாக விதித்து அனுப்பி வைத்தான் .

என்ன நிபந்தனை அது தெரியுமா? விஞ்ஞான மேதை ஆர்க்கிமிடீஸ் உயிருக்கு எவ்வித ஆபத்தும் நேரக்கூடாது. அதே நேரத்தில் அவர் வாழும் வீட்டையும் நாசப்படுத்தக் கூடாது என்பது தான் அந்தக் கடுமையான கட்டளை!

ஏன், அந்த ரோம தளபதி அவ்வாறு ஆணையிட்டான்? சைரக்யூஸ், பல ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை கைப்பற்ற வந்த இதே ரோமப் படைகளைத்