பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ஆர்கிமிடீஸ் என்றால் யார் என்று ரோமப்படைகளுக்கு அடையாளம் தெரியாததால், கிரேக்க மன்னனது ஆட்சியிலே இருந்த அந்த நகரத்தை ரோமப்படைகள் முன்பு தாக்கிப் போராடின!

அப்போது அவர், ஒரு பெரிய சாம்ராச்சியாதிபதியிடம் உள்ள பெரும் படையைப் போல, தன்னந்தனியராய் நின்று ரோமப்படைகளை ஒரே இரவில் தனது கண்டு பிடிப்புக் கருவிகளால் முறியடித்துத் துரத்தினார்.

ரோமப் படைகள் புறமுதுகிட்டு ஓடிய பிறகு தான் ஆர்க்கிமிடீஸ் என்றால் யார்? அவர் எப்படிப் பட்டவர்? என்னென்ன கருவிகளைப் போர்க்களத்திலே பயன்படுத்தினார்? இதுவரைக் கண்டுபிடித்த போர்க்கருவிகள் என்னென்ன ? என்பதையெல்லாம் மார்சேல்ஸ் அறிந்து கொண்டான்.

தனிமனிதன் ஒருவன், ஒரு பெரும்படைக்குச் சமமாகப் நின்று போரிட்டத் திறனைப் பாராட்டியதோடு, இப்படிப்பட்ட விஞ்ஞானிகளது கண்டுபிடிப்புகளை எந்த நாடும் அலட்சியப்படுத்த முடியாது - அதுகூடாது என்பதை மார்சேல்ஸ் உணர்ந்தான். அதனால், அவனுக்கு ஆர்க்கிமிடீஸ் மீது ஒரு தனிப்பற்று ஏற்படலாயிற்று.

ஆர்க்கிமிடீஸ் ரோமப் படைகளை எதிர்த்ததற்குக் காரணம், கிரேக்க மன்னன் ஆட்சியிலே உள்ள சைரக்யூஸ் நகரத்தைக் காப்பற்றி, கிரேக்க சாம்ராச்சியத்தின் வல்லமையை உலகுக்கு உணர்த்த அல்ல என்பதையும், அந்த தளபதி தீர விசாரித்து உண்மையை அறிந்தான்.