பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

69


"உலகம் என்று தோன்றியதோ, அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ அறநூல்கள் தோன்றியும், மனிதன் ஏன் இன்னும் வாழக் கற்றுக் கொள்ளாமல் இருக்கின்றான்?"

"அன்றாடம் பாதை மாறி மாறி அலைகிறானே ஏன்? அவனுக்கென்று உருவாக்கப்பட்ட அறவழிகள் இருக்கும் போது, இந்தப்பாதைகளை நோக்கி நடப்பது ஏன்?"

"அறநூல் அறியாதவன் மட்டுமா இப்படி நடக்கிறான்? அறிந்தவனும் நடக்கிறானே, ஏன்?"

"சட்டமே படியாத பாமர மக்களும் சட்டம் என் கையில் என்ற படித்தவர்களும், சட்டத்தை மீறுகிறார்களே - ஏன்?"

“எதற்காக சட்டத்தை இயற்றுகிறார்களோ, அதற்காக, அதை நிறைவேற்றாத அரசும் வாழ்கின்ற போது, சட்டமும் வாழ்கின்றதே அது எப்படி?"

"இவ்வாறு எப்படி? ஏன்? என்ற இந்த இரண்டு வினாக்கள்தான் தத்துவ ஞானத்தின் அடிப்படையாகும்"

“எப்படி என்று விளித்துவிட்டு ஏன் என்ற வினாவை எழுப்பி விட்டுத் தடை விடைகளைக் கண்டுபிடியுங்கள் என்று, மக்களைப் பார்த்துக் கூறுபவன், நம்மைச் சிந்திக்கத் துண்டிய பகுத்தறிவாளர்களாக இருக்கலாம். ஆனால், தத்துவ ஞானிகளாக இருக்க முடியாது"

"தத்துவஞானி, தன்னை, தனது மனத்தை, மனம்