பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


உடலோடு, ஆனால், தளராத மன உரத்தோடு, ஒடியபடியே அறிவுப் புரட்சியைச் செய்தார்.

ஒடிய ஊர்களிலே எல்லாம் அவரது கருத்துக்களை ஆதரித்தவர்கள் மட்டுமே ஆதரவு தந்தார்கள். பிறகு அங்கும் அறிவெழுச்சிக்கு வித்திடுவார்! மீண்டும் ஒடிக்கொண்டே இருப்பார்.

கணிதத்தைப் பற்றியும், வானிலைப் பற்றியும் அவர் வரையறுத்துக் கண்ட உண்மைகள், வாழ்க்கைக்கு வழி காட்டிகளாக அமைந்தன.

மத்தியத் தரைக்கடல் பகுதிகளிலே உள்ள ஊர்களிலும், எகிப்து நாட்டிலும் சென்று, எகிப்து மக்களது கணிதத்தின் பெருமையை வானளாவப் பேசினார்.

உலகிலே மிகச் சிறந்த கணிதக் கலையின் அருமை பெருமைகளை மிக அழகாகத் தக்கச் சான்றுகளோடு விளக்கி எடுத்துரைத்தார்.

எகிப்திய மக்களிலே பலருக்கு ஆணவ மனோபாவம் ஆர்ப்பரித்தது! அவர்களும் அவரை எதிர்த்து விரட்டினார்கள்.

பிறகு எங்கே போவார் அந்த அறிவுக்கரசர்? எங்கே இருக்கிறது சுதந்திர அறிவோடு போகும் இடம்? அறிவை வரவேற்கும் அறிவு பூமி எங்கே இருக்கிறது? தேடிப் பார்த்தார்.

கணிதக் கலைஞன்! மனோ தத்துவ நிபுணன்! உயிரியல் வித்தகன்! உலகையே தனது காலடியில் வீழ்த்தும் உயர்ந்த தத்துவ ஞானிக்குப் போகும் இடம் எங்கே என்று தெரியவில்லை.