பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் என்.வி.கலைமணி

87


புழுக்கள், பூச்சிகள், மிருகங்கள் ஆகியவற்றின் இதயங்களை அறுவை செய்து, அவை எவ்வாறு இயங்குகின்றன என்பதை அறிந்தார்.

இதயத்தின் இயக்கம் எவ்வாறு இயங்குகிறது என்பதை, அவர் எழுபத்தெட்டுப் பக்கங்கள் அடங்கிய ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதினார்.

'விலங்குகளின் இதயமும் - இரத்தமும் இயங்குவதைப் பற்றிய உடற்கூறு அமைப்பியல் ஆராய்ச்சி விளக்கம்' என்று அதற்குப் பெயரிட்டு கி.பி.1628-ஆம் ஆண்டு வெளியிட்டார்.

இந்த ஆராய்ச்சி நூல், அக்காலம் வரை மருத்துவத் துறையில் வெளியான கருத்துகளைத் தடை விடைகளை எழுப்பி விளக்கமாக எழுதப்பட்ட நூல், என்று மருத்துவ உலகம் இன்றும் மதிக்கின்றது.

விஞ்ஞானம் முன்னேறுவதற்குரிய மிக முக்கியமான நூலாக அது விளங்கியது. அந்நூல் வெளிவந்த பிறகு, உயிர்ப் பிராணிகள் உடலுறுப்புக் கூறுகளின் செயல்களைப் பற்றிய அறிவைத் தெரிந்து கொள்ள, நல்ல குறிப்பேடாகக் கூடத் திகழ்ந்தது என்று கூறலாம்.

இதயத்தைப் பற்றி டாக்டர் ஆர்வி கூறிய கண்டுபிடிப்புக் கருத்துக்களை மருத்துவ உலகம் வரவேற்க மறுத்து விட்டது.

எந்த மருத்துவ அறிஞனும் தனது எண்ணத்தைக் கூட, மனம் திறந்து வெளியிட முன் வரவில்லை - மறுத்து விட்டான்!