பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ணெய்யை ஊற்றினார்கள். புரட்சிக் காற்றும் புயலாகப் புகுந்தது!

ஒருநாள் திடீரெனப் புரட்சிக்காரர்கள் டாக்டர் ஆர்வி வீட்டிற்குள்ளே பூட்டை உடைத்துப் புகுந்தார்கள்.

நெருப்புப் பந்தங்களை ஏந்தியவாறு புகுந்து அவர்கள் வீட்டைத் தீயிட்டு எரிய வைத்தார்கள். சாம்பலாயின - அவரது வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களும்!

வீடு மட்டுமா எரிந்தது? ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக அவர் அரும்பாடுபட்டுக் கண்டு பிடித்து வைத்திருந்த அத்தனை அரிய ஆய்வுக் குறிப்புகளை எல்லாம் எரித்துச் சாம்பலாக்கி விட்டார்கள்!

மக்கள் சமுதாயத்திற்காக அவர் அல்லும் பகலும் அயராது உழைத்து உழைத்துத் தேடி வைத்திருந்த ஆராய்ச்சிக் குறிப்பேடுகளை - அந்த நாட்டு மக்களே அழித்து விட்டார்கள்.

என்னென்ன அற்புதக் கண்டுபிடிப்புகளை அவர் கண்டுபிடித்து எழுதி வைத்திருந்தாரோ, அவற்றுக்கெல்லாம் அழுக்காறு உள்ளம் படைத்த அறிவின் பகைவர்களாலே நெருப்பிடப்பட்டு விட்டன.

புரட்சிக்காரர்களால் தமது அரிய உழைப்புச் செல்வங்கள் அழிக்கப்பட்டதை எண்ணியெண்ணி ஆறாத் துயருற்றார் - நெஞ்சுருகினார் - வேதனைப் பட்டார்! கண்ணீர் விட்டபடியே வாழ்ந்தார்.