பக்கம்:விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

விஞ்ஞான வித்தகர்கள் வரலாறு


ஏன், இப்படி சாயம் போடுகிறார் பூச்சிகளுக்கு? இவருக்கு ஏன் இந்த பொருளற்ற வேலை? பொருத்த மற்றப் பணி?

சாயம் போடக் கூட பணம் வேண்டுமே.

அதற்குக் கூடப் பணம் சம்பாதிக்க முடியாதவர், சாயம் போடும் பணியை மட்டும் ஏன் இவ்வளவு கருத்தாகவும் - கவனமாகவும் செய்கிறார்?

ஒரு டாக்டருக்குத் தாம் என்ன செய்கிறோம், அதனால், தன் வாழ்க்கை நகருமா என்று கூடவா தெரியாது?

அவர் சாயம் போடும் பணியை வேடிக்கைப் பார்ப்பவர்கள், நாள்தோறும் அவருக்கு முன்பும் பின்பும் தன்மீது கேலிக் கணைகள் தொடுப்பதை அவரே கேட்டிருக்கிறார் - பலமுறைகள்!

அவரையும், சாக்கடையில் கைவிடும் அவரது வேலையையும் மக்கள் விமர்சனம் புரியப் புரிய, அவருக்கு உத்வேகம் முன்னைவிட அதிகமாகப் பெருக்கெடுத்தது.

எதைப் பற்றியும் பொருட்படுத்தாத அவர், தனது பெரும்பாலான காலத்தை, கிருமிகளுக்குச் சாயம் ஏற்றி ஏற்றியே அழகுப் பார்ப்பதிலேயே கழித்து வந்தார். இக் காட்சிகளை எல்லாம் கண்டு அவரது மனைவி வேதனைப்பட்டார். வெளியே கூற முடியாமல் தவித்தார்.

எரிக்கும் வயிற்றுப் பசியெனும் நெருப்பிலே அகப்பட்டு துடிதுடித்தார். வறுமை என்ற தேள்