பக்கம்:விடிவெள்ளி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 - விடிவெள்ளி அவன் வீண் பெருமை பேசவில்லை என்பதை அவனது தடந்தோள்களும் வீங்கிய புயங்களும் அகன்ற மார்பும் அவளுக்கு எடுத்துக்காட்டின. அவள் கயல் விழிகள் வீரம் நிறைந்த அவன் மேனியை அளவிட்டன. அவன் சொற்கள் ஜீவனுக்கு வகையூட்டின. , இருந்தாலும் நீங்கள் தனியே இந்நகரில் திரிவது தகாது. அன்றே நான் உங்களுக்குச் சொல்லவில்லையா? பக்கம் என் தந்தையைக் கசa லாவேண்டாம்; அந் திரும்பவும் வேண்டாம் என்று எச்சரித்தேனே...' "நான் தேவரைக் கண்டு பேச வரவில்லை...' "ஆனால், நீங்கள் இருந்தநிலையில் அவர் உங்களைக் காண நேரிட்டால் உங்கள் கதி என்ன ஆகியிருக்கும்? குடியர்கள் மீண்டும் வத்திருந்தால் உங்களைச் சும்மாவா வீட்டிருப்பார்கள்?" அவள் பேச்சில் உண்மை ஒலி செய்ததால் அவன் மறுத்துரைக்க முடியாமல் இருந்தான். இன்று இந்நகரில் ஏற்பட்டுவிட்ட புதிய மாற்றங் களை நீங்கள் அறியவில்லை போலும் இந்நகர மாந்தர் களிடமுள்ள கத்தி, வாள், ஈட்டி போன்ற கருவிகளை எல்லாம் பிடுங்கும்படி கூற்றன் நாயனார் கட்டளை பிறப்பித்து விட்டார். வீடுவீடாக வீரர்கள் சோதனை செய்யத் தொடங்கியுள்ளனர்...' 'ஒகோ' என்றான் இளம்வழுதி. அதனால் தான் நகர மக்கள் பரபரப்புற்துக் காணப்பட்டார்களோ? இன்று பகலில் தெருக்களில் மக்கள் கூடிக் கூடிப்பேசி நின்றார்கள். அவர்கள் முகத்தில் அச்சமும் ஐயமும் குழம்பிப் படர்ந்ததையும் கவனித்தேன். அது ஏன் என்று இப்பொழுது தான் புரிந்தது' என்றான் இளம்வழுதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/109&oldid=905857" இலிருந்து மீள்விக்கப்பட்டது