பக்கம்:விடிவெள்ளி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் இ 127 சிரித்தன. உயிர்கள் உற்சாகம் பெற்றுக் கலகலப்பு அடைந்தன. - நிதான கதியிலே குதிரைமீது சென்ற இளம் வழுதி யும் சாத்தன் கணபதியும் கூடச் சிரித்தார்கள். களங்க மற்ற, கவலையற்ற, சிரிப்பு அது. அவர்கள் குடிசையை விட்டு நீங்கி வெகு தூரம் வந்து விட்டார்கள். இனி எவரும் பின் தொடர்ந்து வந்து தாக்க முடியாது என்று தோன்றியதுமே அவ்விருவரும் குதிரை களின் ஒட்ட வேகத்தை மட்டுப்படுத்தினர். கிழவன் உடல் வெளியே கிடந்தால் வழியோடு போவோரின் கவனத்தை இழுக்கும். அவர்கள் குடிஆக் குள் எட்டிப் பார்க்க நேரிடும். உள்ளே தென்படுகிற நிலைமை கலவரம் உண்டாக்கும். பலருக்கு வீண்வேலை கொடுக்கும். நமக்கும் இன்னல் விளைந்தாலும் விளைய லாம். இதை எல்லாம் தவிர்ப்பதற்காகத்தான் அத்தப் பிணத்தை எடுத்து உள்ளே போட்டுவிட்டு, கதவை இழுத்துச் சாத்தினேன்' என்று சாத்தன் சொன்னான். வருமுன் காக்கும் நின் பண்பு வாழ்க!' என்றான் வழுதி. - - அதிலிருந்து இருவரும் பேச்சிலே இன்பம் காணலா யினர். பேய்களாக மாறிய மனிதர்களைப்பற்றிச்சொல் வதாகக் கூறினாயே? மறந்துவிட்டாயா?" என்று சாத்தன் கேட்டான். . 'மறக்க முடியுமா?' என்ற வழுதி, துதவியும் அடியார்களும் திகழ்த்திய கூட்டம் பற்றி விரிவாகவே சொன்னான். - - 'அந்த நேரத்தில் நீ ஆற்றோரத்தில் அலைய தேர்ந்த தன் காரணம் என்ன? அது எனக்கு விளங்கவில்லையே!” என்றான் தோழன், -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/128&oldid=905896" இலிருந்து மீள்விக்கப்பட்டது