பக்கம்:விடிவெள்ளி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 விடிவெள்ளி 'முத்து, உன்னை, எங்கெல்லாம் தேடுவது?’ என்று கேட்டுக்கொண்டே வந்து சேர்ந்தாள் அமுதவல்வி முத்து சிரித்தாள். "இங்கே உள்ளே ஆள் இருந்தது அக்காளுக்கும் தெரியும்' என்று சாத்தனிடம் சொன்னாள். அமுதவல்லி அவனைக் கவனித்தாள். நீங்கள் இனம் வழுதியின் நண்பர் என்று நினைக்கிறேன். அவரை இங்கு அழைத்து வந்தது. நீங்கள்தானே?’ என்று வினவினாள். "ஆமாம். தான்தான் சாத்தன் கணபதி, மகிழ்ச்சி என்றாள் அமுதம். நீங்கள் நல்லது எண்ணிச் செய்தீர்கள். ஆனால் அது அவரை இன்னவில் ஆழ்த்திவிட்டது அவர் இங்கு சிறை வைக்கப்பட்டார். தெய்வத் துணையால் இம்முறை தப்பிவிட்டார். இனி என்ன நேருமேர் தெரியாது... முத்து ஓடி வா. அம்மா தேடுகிறார்கள் என்று சோல்லி, சிறுமியை அழைத்துக் கொண்டு சென்றாள். - மாறன் காரி ஏதோ சதிவேலை செய்கிறார் என்று புரிந்துகொண்டான் அவன் அவருடைய பகைமையை ஏற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை. அதனால் ஒன்றும் நிகழாததுபோலவும் நடந்துகொண்டான். விருந்துண்டு, இன்முகத்தோடு விடை பெற்றுச் சென்றான் மாறன்காசியின் உண்மைத்தன்மையை மங்கையர்க் காசிப் பிராட்டிக்கு உடனடியாக அறிவிக்க வேண்டியது அவசியம் என்று சாத்தன் கருதினான். நேரே மதுரை சென்று, தான் தெரிந்து கொண்டவற்றை அவளுக்குக் சொன் னான். வழுதி செவ்விருக்கை நாடு நோக்கிப் போயிருப்பான் என்றே நினைக்கிறேன். அவனைத் தேடிப்பிடித்துக்கொல் லும்படி மாறன்காரி ஆட்களை அனுப்பி இருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/159&oldid=905963" இலிருந்து மீள்விக்கப்பட்டது