பக்கம்:விடிவெள்ளி.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 0 173 8. சில அதிர்ச்சிகள் மாறன்காரி வெறி கொண்ட வேங்கை போல் கொதித்துக் குமுறிக் கொண்டிருந்தார். வெகு காலமாக அவர் தம் உள்ளத்தில் வளர்ந்துவந்த ஆசைகள் பெரியன. அவற்றை மனக்குகையிலேயே மக்கி விடும்படி எவராவது சதி செய்யமுடியும்-செய்யக்கூடும்என்று அவர் கனவிலும் கருதியவர் அல்லர். ஒளி மய மான எதிர்காலம் பற்றியே அவர் கனவுகள் கண்டு வாழ்ந் έή 7 τ. அவற்றின் அடிப்படையைத் தகர்க்க முனைகிறவன் போல இளம்வழுதி முனைக்கவும் மாறன்காணி ஆத்திரமே கொண்டார். வலிமையற்ற மகனை மன்னன் ஆக்கி விட்டு, அவன் பெயரால் நாட்டை ஆட்டிப்பண்டக்கலாம் என்று மனக்கோட்டை கட்டிவத்தார் அவர். அக்கோட் டையைச் சிதைக்கும் பெருச்சாளி மாதிரித் தோன்றிய இளைஞனை அவர் மன்னிக்க முடியுமா? மறந்து மன்னிக் கும் பெருந்தன்மை மா நன்காரியிடம் இல்லாத குணங் களில் ஒன்றாகும். இளம்வழுதி உதவிகேசரி, தம்மைத் தேடி வந்ததுகூட தெய்வத்தின் திருவருளால் நிகழ்ந்தது என்றே அவர் கருதினார். அன்று அவர் பறம்பு நாட்டிலேயே இருந்தி ருந்தால் இரவோடு இரவாக வழுதியை ஒழித்துக்கட்ட வழிவகைகள் வகுத்துக் கொடுத்திருப்பார். வழுதியின் நல்லப்காலம் மாறன் காரியை அகற்றிவிட்டது: அவருடைய திட்டங்கள் பற்றிக் கலந்து ஆலோசிப் பதற்காக அவர் சிலரைக் காணவேண்டியது அவசிய மாயிற்று. பொறியில் வலியவந்து சிக்கிய எலி தப்பி விடுமா என்ன என்ற தைரியத்தில் அவர் பலத்த காவல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/174&oldid=905997" இலிருந்து மீள்விக்கப்பட்டது